1 Jul 2018

கல்குடாப் பகுதியில் தாக்கப்பட்ட இரு ஊடகவியலாளர்களின் வழக்கை பொலிசார் இழுத்தடிப்பு செய்கின்றனரா! என நீதவானால் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

SHARE
அட்டக்களப்பு கல்குடா கும்புறுமூலை வேம்புப் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றதான எதனோல் தொழில்சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமை தொடர்பான வழங்கு மீண்டும் விசாரணை வியாழக்கிழமை (28.06.2018) திகதி வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் எடுத்தக்கொள்ளப்பட்டபோது மீண்டும் குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை நீதவான் ஏ.சி. றிஸ்வி முன்னிலையில் வழக்கு எடுத்தக்கொள்ளப்பட்டபோது பிரதி வாதிகள் இருவரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

வழக்கின்போது இன்றைய தினமும் மன்றுக்கு வழங்கப்பட்ட அறிக்கை பிழையானது என நீதவான் பொலிசாருக்கு குறிப்பட்டிருந்தார்.

ஏற்கனவே கல்குடா பொலிசாரினால் வழங்கப்பட்ட அறிக்கை மூன்று தடவை பிழையானதென நீதிமன்று தெரிவித்திருந்த நிலையிலும் இன்றைய தினமும் பிழையான அறிக்கையை மன்றுக்கு பொலிசார் வழங்கப்பட்டிருந்தது.

பல தடவை குறித்த ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பாக அறிக்கை பிழையான முறையில் மன்றுக்கு வழங்கப்பட்டபோதும் திருத்துவதற்கு பல தடவை கல்குடா பொலிசார் மன்றில் கால அவகாசம் கோரியிருந்த நிலையில் நேற்றைய வழக்கின்போதும் பிழையென நீதிபதி ஏ.சி.ரிஸ்வி தெரிவித்தபோதும் வழமைபோன்று அறிக்கை திருத்தி வழங்குவதற்கு கல்குடா பொலிஸ் கால அவகாசம் கேட்டபோது அறிக்கை திருத்தி வழங்குவதற்குரிய இறுதி காலம் இன்று என்பதால் கால அவகாசம் வழங்க முடியாது என பொலிசாரின் கால அவகாச கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.

எனினும் குறித்த வழக்கை இழுத்தடிக்கும் நோக்குடன் கல்குடா பொலிசார் செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நீதவான் இதன்போது கூறியுள்ளார்.

முறைப்பாட்டாளரிடம் குறித்த வழக்கு தொடர்பாக சமாதானத்திற்கு வருகின்றீர்களா என நீதவான் கேட்டபோதும் முறைப்பாட்டாளர் அதற்கு மறுப்பு  தெரிவித்தனர்.

இதன்போது தாக்குதல் சம்பவம் தொடர்பில் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் கூடிய விதம் குறித்து பொலிசாருக்கு நீதவானால் அறிவுறுத்தப்பட்டதுடன், எதிர்வரும் ஜீலை 14ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அன்றைய தினம் வழக்கு விளக்கமளிப்பு நடைபெறும் என நீதவான் தெரிவித்துள்ளார்.

எனினும் தனது கட்சிக்காரர்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் ஒளிப்பதிவு செய்யப்படுவதாக பிரதி வாதிகள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தனது கட்சிக் காரர்கள் மன உளச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.

எனினும் வெளிப்புறத்தில் இருந்து ஒளிப்பதிவு செய்வதில் எவ்வித சிக்கலும் இல்லையென நீதவான் கூறியுள்ளார்.

கல்குடா கும்புறுமூலை வேம்பு பகுதியில் அமைக்கப்பட்டுவருகின்ற எதனோல் தொழில்சாலை தொடர்பில் கடந்த வருடம் 2017.03.21ம் திகதி செய்தி சேகரிக்கச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களான நல்லதம்பி நித்தியானந்தன் மற்றும் புண்ணியமுர்த்தி சசிதரன் ஆகிய இருவரும் குறித்த பகுதியில் வைத்து அங்கிருந்தவர்களினால் தாக்குதலுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: