கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை 01.07.2018 மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் சங்கத்தின் உபதலைவர் ஏ. பிரியகாந்தன் தலமையில் இடம்பெற்றது.
நிருவாகத் தெரிவின்போது சங்கத்தின் பொதுச் செயலாளராக மீண்டும் சிவக்கொழுந்து ஜெயராசா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு தலைவராக ஏ. பிரியகாந்தன்; (மட்டக்களப்பு) உபதலைவராக வி. தியாகராஜா (அம்பாறை) உப செயலாளராக ஜே. மோகன்ராஜ் (திருகோணமலை) பிரச்சாரச் செயலாளராக என். கிட்ணதாஸ் (மூதூர்) நிருவாகச் செயலாளராக சி. சங்கர் (திருகோணமலை) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும், மட்டக்களப்பு, அம்பாறை திருகோணமலை ஆகிய மாட்டக் கிளைகளுக்கான நிருவாகமும் தெரிவு செய்யப்பட்டது.
0 Comments:
Post a Comment