4 Jun 2018

இலவச கணனி, சிங்கள, ஆங்கில கற்கை நெறிகள் ஆரம்பம்.

SHARE
மட்டக்களப்பு மைலம்பாவெளி எஸ்டோ (ESDO)  உதவும் கரங்கள் அமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இலவச கணனி, சிங்கள, ஆங்கில கற்கை நெறிகள் இடம்பெறவுள்ளதாக உதவும் கரங்கள் அமைப்பின் (ESDO)  தலைவர் ஞாயிற்றுக் கிழமை (03) ஏ.ஞானம் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக அவர் மேலும் குறிப்பிடுகையில்….

மட்டக்களப்பு  உதவும் கரங்கள் (ESDO)  அமைப்பினால் இலவச கணனி, சிங்கள, ஆங்கில கற்கை நெறிகள் கல்விப் பொதுத்தர சாதாரண தரம், மற்றும், உயர்தரம், படித்த மாணவர்களுக்கு, தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து கொள்ளலாம்.

வகுப்புகள் எதிர்வரும் 20.06.2018 அன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை 14.06.2018 இற்று முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பெற்று கொள்வதற்கு உதவும் கரங்கள், விபுலானந்தபுரம், மயிலம்பாவெளி, மட்டக்களப்பு, எனும் முகவரியில் அமைந்துள்ள எமது காரியலாயத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலதிக விபரங்கள் தேவைப் படுபவர்கள் 0653657780, 0653064041, 0778214155 போன்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். என அவர் தெரிவித்தார் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: