4 Jun 2018

கழிவாக வீசப்படும் பிளாஸ்ரிக் வெற்று போத்தல்களை விலைக்கு வாங்கி மீள்சுழற்சிக்குட்படுத்தும் திட்டம்

SHARE
கழிவாக வீசப்படும் பிளாஸ்ரிக் வெற்று போத்தல்களை விலைக்கு வாங்கி அவற்றை மீள்சுழற்சிக்குட்படுத்துவதோடு திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்து சூழலைப் பாதுகாக்கும் அமுல்படுத்தப்படுவதாக  மட்டக்களப்பு மாநகர சபை நிலையியற் குழுக்களின் சுகாதாரப் பிரிவுத் தலைவர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவில் இது தொடர்பான வேலைத் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுபற்றி ஞாயிற்றுக்கிழமை 03.06.2018  மேலும் தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாநகர சபையினால் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளில் பிளாஸ்ரிக் போத்தல்களை தரம்பிரித்து மீள்சுழற்சிக்குட்படுத்தும் செயற்திட்டத்திற்கு நிதி அனுசரணை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆசிய பவுண்டேஷன், பெய்ரா குறூப் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை என்பனவற்றினால் கைச்சாத்திடப்படவுள்ளது.

இவ் ஒப்பந்தத்தின் மூலம் மக்கள் கழிவுகளாக வீசும் பிளாஸ்ரிக் போத்தல்களை ஒரு கிலோ இருபது ரூபாவிற்கு (20.00) கொள்வனவு செய்வதற்கான திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், கழிக்கப்படும் பிளாஸ்ரிக் போத்தல்ளை சேகரிப்போரை ஊக்குவிக்கும் நோக்கொடு அவர்களுக்கு மேலதிகமாக ஊக்குவிப்புத் தொகையும் வழங்கப்படவுள்ளது.

'வாழ்விற்கு திரும்பிக் கொடு' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், காலி மாநகர சபைகள் மற்றும் பியகம பிரதேச சபையின் நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட குறித்த உள்ளுராட்சி மன்ற அங்கத்தினர்களுக்கான தெளிவுபடுத்தும் செயலமர்வும் ஏற்கெனவே இடம்பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 01.06.2018 இடம்பெற்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என். மணிவண்ணன், பிரதி ஆணையாளர் என். தனஞ்செயன், சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகர உறுப்பினர் பா. குஜாஜினி, நிர்வாக உத்தியோகத்தர் வி. ரோஹினி, முகாமைத்துவ உதவியாளர் மற்றும் சுகாதாரப் பிரிவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.









SHARE

Author: verified_user

0 Comments: