19 Jun 2018

கிறவல் வீதி அமைக்கும் பணிகள் ஆரம்பம்

SHARE

மட்டக்களப்பு - மண்முனைப்பற்று ஒல்லிக்குளத்தில் அமைந்துள்ள  அப்துல் கபூர் ஹாஜியார் மணல் வீதியை கிறவல் வீதியாக அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.மண்முனைப்பற்று பிதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம். றஹ்மதுல்லாஹ் ஞாயிற்றுக்கிழமை 17.06.2018 கிறவல் வீதிக்கான நிருமாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

பிரதேச சபையூடாக கிடைக்கப்பெறுகின்ற தனது மாதாந்தக் கொடுப்பனவுகளையும்  பிரதேச  சபையால் உறுப்பினர் ஒருவருக்காக ஒதுக்கப்பட்ட ஐந்து டிப்பர் கிறவலையும் கொண்டு இந்த முன்மாதிரி வீதி நிருமாணம் துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

பிரதேச மக்களும் சிரமதானப் பணிகளில் பங்கெடுத்து வீதி செப்பனிடும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தேர்தல் பிரச்சார காலங்களில் மக்களுக்களித்த வாக்குறுதிகளுக்கமைவாக உறுப்பினர்களின் மாதாந்த கொடுப்பனவுகளை இவ்வாறான நோக்கங்களுக்காக பயன்படுத்தி பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாக முன்னணியின் தவிசாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
 

SHARE

Author: verified_user

0 Comments: