24 Jun 2018

வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை

SHARE
வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளில் பதினையாயிரம் பட்டதாரிகளை பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்து வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர பிரதேச செயலக நிருவாக எல்லைக்குள், நிரந்தர வதிவிடத்தை கொண்டுள்ள 45 வயதிற்குட்பட்ட, வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் பட்டதாரிகளை பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைக்குச் சமுகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நேர்முகப்பரீட்சை திங்கட்கிழமை 25.06.2018 தொடக்கம் அலுவலக நேரங்களில் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்தாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பயிற்சிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பப்படிவம் திங்கட்கிழமை தொடக்கம் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேர்முகப்பரீட்iயில் கலந்து கொள்வதற்கு கடந்த 06.08.2017 அன்றைய தினம் வெளியான பத்திரிகை விளம்பரத்திற்கமைவாக நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் தெரிவுசெய்யப் படாதவர்களாகவும், 30.06.2018ஆம் திகதி 45 வயதிற்கு உட்பட்டவராய் இருப்பதோடு, மேற்படி திகதிக்கு முன்னர் பட்டம் பெற்றவர்களாக இருப்பவர்கள், ஏறாவூர் நகர பிரதேச செயலத்துக்கு நேரடியாக வருகை தந்து, பூரணப்படுத்தப்பட்ட உரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்து தங்களைப் பதிவு செய்து, நேர்முகப்பரீட்சைக்கான திகதியை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றார்கள்.


SHARE

Author: verified_user

0 Comments: