மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் சுகாதார நிலையியற் குழுவின் தலைவரும் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சங்கத் தலைவருமான சுதந்திர ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் தான் ஆற்றிய சமூக சேவைப் பணிகளுக்காக கௌரவிக்கப்பட்டார்.
மட்டக்களப்பு தாமரைக்கேணி ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய தமிழர் தம் பாரம்பரிய முறையுடன் கூடிய வருடாந்த இரண்டாம் நாள் சக்தி சடங்கு சனிக்கிழமை 24.06.2018 இடம்பெற்றபோது இக்கௌரவிப்பு இடம்பெற்றது.
ஆலய பரிபாலன சபையினரின் பங்கு பற்றலுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு சக்தி கே. குமாரதாசன் ஆசியுரையுடன் ஆலயத் தலைவர் கு.சுவேந்திரநாதன் மாநகர சபை உறுப்பினரை பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
0 Comments:
Post a Comment