மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை பிரதான வீதி – 04 ஆம் பிரிவைச் சேர்ந்த 60 வயதுடைய கணபதிப்பிள்ளை சாமித்தம்பி என்பவரைக் கடந்த திங்கட் கிழமை (18.06.2018) முதல் காணவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய திருவிழாவிற்குச் திங்கட் கிழமை (18) சென்ற அவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரின் தொடர்பு கிடைக்கவில்லை. இவரைக் கண்டவர்கள் 0752949514, அல்லது 0755254656 என்ற தொலை பேசி இலக்கங்களுக்குத் தகவல் தருமாறு அவரின் உறவினர்கள் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுதொடர்பில் உறவினர்கள் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment