கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிக்கையிடுதல் மற்றும் ஆவனப்படுத்துதல் தொடர்பான பயிற்சிப்பட்டறை செவ்வாய்க்கிழமை (26) மட்டக்களப்பு கோப் இன் விடுதியில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புகாரி மொகமட்டின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 12 பொலிஸ் நிலையங்களினதும் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.
குற்றம் சம்மந்தமாக அறிக்கையிடுதல், விசாரணைகளை மேற்கொள்ளுதல், நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், அறிக்கைகளை ஆவணப்படுத்துதல் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் இப்பயிற்சியின் போது மேற்கொள்ளப்பட்டன.
0 Comments:
Post a Comment