நாம் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வை இளைஞர்களுக்கு ஊட்டி இளைஞர் சமுதாயத்தை சமாதானத்துக்காகத் தயார்படுத்துவதே சமகாலத் தேவையாகும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவையால் அரச திணைக்களங்கள், உள்ளுராட்சி மன்றங்கள், பொலிஸ் மற்றும் சிவில் சமூகப் பிரதிகள் ஆகியோருக்கு யுத்த காலத்திலும் யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையிலும் செயற்படுத்தப்பட்டு வரும் சமாதான சௌஜன்ய செயற்பாடுகளைப் பற்றி தெளிவுபடுத்தும் கருத்தரங்கு மட்டக்களப்பு சதுனா விடுதியில் செவ்வாய்க்கிழமை 26.06.2018 இடம்பெற்றது.
தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ பௌத்த சயமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகவாழ்வும் இன ஐக்கியத்திற்குமான சர்வமத ஆர்வலர்கள் மற்றும் சமாதான ஐக்கிய செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர், நாட்டின் மொத்த இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கையில் சுமார் 2 சதவீதமானோரே பல்கலைக்க கழகம் சென்று தமது உயர் கல்வித் தகைமைகளை நிறைவு செய்து கொள்கின்றனர்.
அதேவேளை, மீதமுள்ள 98 சதவீதமான இளைஞர் யுவதிகளை நாட்டின் எதிர்காலத்திற்காக நாம் எவ்வாறு தயார்படுத்துகின்றோம் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
நம்முன்னுள்ள மிகப் பெரிய சவால் இளைஞர் யுவதிகளை எவ்வாறு இன சௌஜன்யத்துக்காக எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்பதேயுகும்.
நமது பிறப்புச் சான்றிதழ்களிலே இலங்கையர் என்ற பொதுவான அடையாளத்திற்குப் பதிலாக தமிழர், சிங்களர், சோனகர், என்று பேதம் பிரித்து அiடாளப்படுத்திப் பழக்கப்பட்டுள்ளோம்.
இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். காட்டிலே நேரிய மரங்கள் மிக மிகக் குறைவாகவே இருக்கின்ற அதேவேளை, வளைந்து நெழிந்த மரங்கள் கூடுதலாக இருக்கின்றன.
இதேபோலத்தான் நாட்டிலுள்ள மனிதர்களிலும் நேரிய வழி செல்லும் நேர்மையானவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு குறைவானவர்களாகவே இருக்கின்றார்கள்.
இதனை மனதில் நிறுத்தி சமாதகானம் மற்றும்இன நல்லிணக்கத்துக்கான ஊக்கிகளாக ஒட்டு மொத்த சமுதாயத்திலுள்ளவர்களும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
எளிதில் தீப்பற்றிக் கொள்ளக் கூடிய ஒன்றாக நமது நாட்டில் இன மத உணர்வுகள் தூண்டப்படுகின்றன.
இனவாத மதவாத அடிப்படையில் செயற்படுவதைத் தவிர்த்துக் கொள்ள முன்வந்தால் நாடு அழிவைத் தவிர்க்கலாம்
எல்லா செயற்பாடுகளிலும் மதங்களையும் இனங்களையும் சேர்ந்தவர்கள் இணைந்திருப்பது இனங்களுக்கிடையிலான இடைவெளிகளைக் குறைத்து சகவாழ்வைக் கட்டியெழுப்ப உதவும்.
நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு இன நல்லிணக்கத்திற்காகவும் சகவாழ்வுக்காகவும் பிரதேசத்திற்குப் பொருத்தமான செயற்பாடுகளை அடையாளம் கண்டு செயலாற்ற வேண்டும்.
0 Comments:
Post a Comment