19 Jun 2018

மட்டக்களப்பு மாநகரசபை வட்டாரங்களின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வரவு செலவுத் திட்டம் தயாரித்தல் பற்றி விளக்கமளிக்கும் மக்கள் சந்திப்பு

SHARE
மட்டக்களப்பு மாநகரசபை வட்டாரங்களின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வரவு செலவுத் திட்டம் தயாரித்தல் பற்றி விளக்கமளிக்கும் மக்கள் சந்திப்பு திங்கட்கிழமை (18.06.2018) கல்லடி, நொச்சிமுனை கொலனிப் பகுதியில் நடைபெற்றது.
வீதிகள் மற்றும் வடிகான்கள் புனரமைப்பது உட்பட வட்டார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு 2019ஆம் ஆண்டுக்கான பாதீடு தயாரித்தல் விளக்கமளிக்கும் கூட்டங்கள் தற்போது மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவில் இடம்பெற்றுவருகின்றன.

இதற்கென மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட 20 வட்டாரங்களிலும் வினைத்திறன் மிக்க சேவையை முன்னெடுக்கும் நோக்கோடு வீதிகள் மற்றும் வடிகான்கள் புனரமைத்தல் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள சகல உறுப்பினர்களுக்கும் வேலைத்திட்டங்கனை முன்னிவைப்படுத்தி சமர்ப்பிக்கும் திட்ட மாதிரிப் படிவங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மாநகர சபை உறுப்பினர்களின் வேலைத்திட்ட விபரங்களை முன்னிலைப்படுத்தி யூன் மாதம் 30 ஆம் திகதிக்குள் தங்களது சிபார்சுக்கு ஏற்ப விண்ணப்பங்களைக் கையளிக்க வேண்டும் எனவும் வேலைத் திட்டங்களை அவதானிப்பதற்காகவும் மற்றும் குறிப்பிடுவதற்காகவும் திட்ட கண்காணிப்புக் குழுக்களை அமைக்குமாறும் மாநகர முதல்வர் ரி. சரவணபவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கல்லடி, நொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய் பகுதிகளில் உள்ள வீதிகள் மற்றும் வடிகான்களின் நிலமைகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

இச்சந்திப்பில் சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், வேலைகள் மற்றும் அபிவிருத்திக் குழுவின் தலைவர் ரி. மதன், நொச்சிமுனை வட்டார உறுப்பினர் செல்வி மனோகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகந்தினி கிருஷ்ணன், கிராமசேவகர் கிருஷ்ணவேணி அருணாச்சலம் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: