பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் கல்வி பொதுத் தர உயர்தர கணித, உயிரியல், மற்றும் தொழில்நுட்ப துறைகளை இவ்வருடம் இணைந்து கொண்ட புதிய மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வும் அவர்களுக்கான கற்றல் வழிகாட்டல் ஆலோசனை மற்றும் ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வுகளும் வியாழக்கிழமை (03) பாடசாலை கேட்போர்கூடத்தில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம வளவாளராக கிழக்கு பல்கலைக்கழக இரசாயனவியல் துறை தலைவர் கலாநிதி எம்.சிதம்பரேசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் கற்றலுக்கான வழிகாட்டலும் ஆலோசனையும் வழங்கியதுடன் களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய குருக்கள் சிவஸ்ஸ்ரீ அங்குச சர்மா இந்துமதப் பிரார்த்தனையையும் ஆசிர்வாதத்தினையும் வழங்கினார்.
இந்நிகழ்வுகளில் பிரதி அதிபர்களான என்.நாகேந்திரன், ரீ.ஜனேந்திரராஜா உயர்தர விஞ்ஞானப்பிரிவு பகுதித்தலைவர் எம்.ஜெயதி, பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் கே.லோகநாதன், பழைய மாணவர் சங்க பொருளாளர் எஸ்.உதயணன் ,உயர்தர தொழில்நுட்பவியல் துறை பகுதித்தலைவர் ரீ.ருத்ராஹரன் மற்றும் உயர்தர விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் துறை ஆசிரியர்களும், சிரேஸ்ட ஆசிரியர்களும் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வினை பாடசாலை ஆசிரியர் ரீ.தெய்வீகன் நெறிப்படுத்தியதுடன் உயர்தர விஞ்ஞானத்துறை பௌதீகவியல் ஆசிரியர் கே.கோவண்ணன் நன்றியறிதலையும் மேற்கொண்டார்.
0 Comments:
Post a Comment