மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தரப் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி எஸ்.பி.ரவிச்சந்திரா இலங்கை அதிபர் சேவை தரம் 1க்கு 2015 ஆண்டு முதல் தரம் உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான பதவி உயர்வுக்கடிதம் கடந்த வாரம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தால் வழங்கி வைக்கப்பட்டது.
தனது ஆரம்பக் கல்வியை யாழ்.கோண்டாவில் இந்து மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக்கல்வியை யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் மேற்கொண்ட இவர், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொருளியல் சிறப்புப் பட்டத்தை (2ம் பிரிவு மேற்பிரிவு) பெற்றுக் கொண்டார். தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும், பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமாவை (புலமைப்பரிசில் சித்தி) யையும் பூர்த்தி செய்துள்ளார்.
தனது முதல் நியமனத்தை 1988 முதல் யாழ் வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்திலும், பின்னர் 1994 முதல் வின்சன்ற் மகளிர் உயர்தரப்பாடசாலையில் பொருளியல் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியராகவும், 2010 இல் மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் பிரதி அதிபராகவும் கடமையாற்றினார்.
மீண்டும் 2011 ஆம் ஆண்டு மட்டக்களப்பு வின்சன்ற். மகளிர் உயர்தரப்பாடசாலையில் பிரதி அதிபராக (நிருவாகம்) தொடர்ந்து கடமையாற்றி வருகிறார்.
இவர் தனது சேவைக் காலத்தில் ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும், பெற்றோர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடன் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் உதவியுடன் பாடசாலையின் முன்னேற்றத்திற்கு நிருவாகத்திற்கு பூரண ஒத்துழைப்புடன் பெரும் பங்களிப்பு ஆற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment