ஏறாவூர்ப் பற்றுபிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெண் உறுப்பினர் ஒருவரின் சைக்கிள் திருடப்பட்டுள்ளாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
செங்கலடி ரமேஷ;புரம் கிராமத்தில் வசிக்கும் ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபை உறுப்பினரான கவிதா ஜெயப்பிரியன் என்பவரின் வீட்டில் வைத்தே புதன்கிழமை 16.05.2018 அதிகாலை இந்தச் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் மேலும் தெரியவருவதாது, மேற்படி பிரதேச சபை உறுப்பினர் தனது வீட்டுத் தாழ்வாரத்தில் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு வழமை போன்று உறக்கத்திற்குச் சென்றுள்ளார்.
அவ்வேளை வாயிற் கதவின் வழியாக சமயோசிதமாக உள்ளே நுழைந்த திருடர்கள் சைக்கிளைத் திருடிச் செல்வது சிசிரிவி காணொளிக் கமெராவில் பதிவாகியிருப்பதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment