மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவல நலன்புரிச்சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டுப்போட்டி செவ்வாய்க்கிழமை(15.5.2018) பிற்பகல் 3.00மணியளவில் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் வெபர் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களும்,கௌரவ அதிதியாக பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் னுச. திருமதி எல்.எம்.நவரெட்ணராசா அவர்களும், மற்றும் முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளர்களான திருமதி.சுபா-சக்கரவர்த்தி,திருமதி.சாந்தி பவளகாந்தன்,ஓய்வுநிலை உத்தியோகஸ்தர்களான பொன்.வன்னியசிங்கம்,ஆர்.நடரராஜா,திருமதி.கிருபாகரன்,எஸ்.குருகுலசிங்கம்,முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன், பொறியியலாளர் எச்.ஏ.எம்.ஹஹீம்,பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம்.ஹைதரலி,நிருவாக உத்தியோகஸ்தர் திருமதி.ஏ.ஜீ.கோபிந்தராசா,அதிபர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
இதன்போது அதிதிகளுக்கு மாலை அணிவித்து சிறப்பாக வரவேற்கப்பட்டார்கள்.கொடியேற்றம் செய்யப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.இவ்விளையாட்டுக்கள் அப்பிள் இல்லம்,ஒரன்ஸ் இல்லங்கிடையில் 100 மீற்றர்,50மீற்றர் ஓட்டப்போட்டி,தடை கடந்த ஓட்டப்போட்டி,புகையிரத ஓட்டம்,பலூன் ஊதி பாத்திரத்தை எடுத்தல்,நாயும் இறைச்சித்துண்டும்,கிளித்தட்டு, சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள் ,அஞ்சல் ஓட்டம்,என்பன நடைபெற்றது.அப்பிள் இல்லம் 127 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்திற்கும்,ஒரன்ஸ் இல்லம் 117புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கும் நிரல்படுத்தப்பட்டது.கல்வி அமைச்சின் "உடல் உளவிருத்தி செயற்பாடுகளை விருத்தி செய்து உடல் ஆரோக்கியம் பேணுவோம்"எனும் சுற்றுநிருபத்திற்கு அமைவாக இவ்விளையாட்டுப் போட்டிகள் குறிக்கோள் தவறாமல் இடம்பெற்றது.போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் அதிதிகளினால் வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment