நேர்மையான அரசியல்வாதிகளின் ஒன்றுபடுதல்தான் இந்த நாட்டுக்கு இப்பொழுது அவசியமும் அவசரமுமாகத் தேவைப்படுகின்து என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மாவடிவெம்பில் திங்கட்கிழமை 07.05.2018 இடம்பெற்ற மேதின நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
சர்வதேச தொழிலாளர் தினத்தை மட்டக்களிப்பிலே நடாத்துவதையிட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த நிகழ்வின் மூலமாக ஒட்டு மொத்த பாட்டாளி மக்களையும் நாம் கௌரவப்படுத்துகின்றோம்.
தொழிலாளர்களின் உரிமைகளை வரபர்பிரசாதங்களை பெற்றுக் கொள்வதற்குத்தான் இந்தத் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஸ்ரீலசு இலங்கை வரலாற்றில் பாட்டாளி மக்களுக்கு அதிக வரப்பிரசாதங்களையும் தந்து வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி தந்துள்ளது.
கொடூர யுத்தத்தில் அனைத்து இனங்களையும் சேர்ந்த தலைவர்கள் உட்பட முப்படையினரும் பொலிஸாரும் மற்றும் எல்ரீரீஈ அமைப்பினரில் பலரும் உயிரிழந்தார்கள்.
இனிமேல் இப்படியொரு அழிவு இந்த நாட்டுக்கு ஏற்படக் கூடாது.
தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதில் தொழிற் சங்கங்களுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது.
யுத்தத்திற்குப் பின்னர் ஒரு தசாப்தத்தைக் கடந்து வந்து விட்டோம்.
இந்தக் காலப்பகுதியில் அனைத்து இன மக்களுக்கும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான விடயங்களை நாம் தேடி பயம் பீதியற்ற நிலைமையை ஏற்படுத்துவதில் எமது அரசாங்கம் பங்களிப்புச் செய்துள்ளது.
ஆனால் எமது முயற்சிகளை பரிகாசிப்பவர்களும் உண்டு. அவர்கள் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே அவ்வாறு நடந்து கொண்டு மக்களைக் குழப்புகிறார்கள்.
தெளிவான வேலைத் திட்டம் தேவை. நாட்டு மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு இன்னும் சரியான திட்டங்களை முற்கொண்டு செல்லமுடியவில்லை. துப்பாக்கியால் தீர்வு காண முடியாது மனிதாபிமானத்தினாலேயே தீர்வு காணமுடியும்.
அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பலர் முயற்சிக்கிறார்கள். நாட்டில் தேசிய ஒற்றுமை ஏற்படுத்துவதற்காக எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
வடக்கு கிழக்கு தெற்கு எங்காயினும் இளைஞர்கள் துப்பாக்கி ஏந்தாத நிலைமை வேண்டும்
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றித் கொள்ளத் துடிக்கும் எவரும் இந்த முன்மாழிவுகளை முன்வைக்கவில்லை உண்மையான நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நர்மையை எடுத்துக் காட்டி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும.
பிரச்சினைகளின் சிக்கலான தன்மையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
சமாதானத்திற்காக நாம் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றோம்.
பொதுமக்களிடையே பல பிரச்சினைகள் உள்ளன. கடந்த 3 வருடகாலமாக அவற்றைத் தீர்ப்பதற்காக நாம் பல நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளோம்.
நாட்டிலே வற(ர)ட்சி மிக மோசமாக உள்ளது. உலகத்திலும் மக்கள் பல போராட்டங்களைச் சந்தித்துள்ளார்கள்.
அனுபவத்தோடும் முதிர்ச்சியோடும் நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும். அரசியல் இலாபங்களுக்காக நாம் மக்களை ஏமாற்றக் கூடாது.
அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக எதனையும் செய்ய துணியக் கூடாது.
2020 இலே நான் இளைப்பாறிப் போவேனா என்றும் சிலர் கேட்கிறார்கள். இல்லை நான்இந்த நாட்டுக்காக இன்னும் சேவையாற்ற வேண்டியுள்ளது.
இந்த நாட்டிலே சமாதானத்தைக் கொலை செய்யாதவர்கள் எத்தனை பேருள்ளார்கள்.
அரசியல் கள்வர்கள், கொள்ளையர்கள், கொலைகாரர்கள், கொலைஞர்கள் வஞ்சகர்கள் இந்த நாட்டுக்குத் தேவையில்லை.
2020 இலே புதிய அரசாங்கத்தைக் கொண்டு வர பலர் கனவு கண்டுகொண்டிருக்கின்றார்கள்.
நாம் ஒதுங்கவும் மாட்டோம் ஓடி ஒழியவும் மாட்டோம். தேசிய ஒற்றுமையை உருவாக்கும் இடத்தில் நாம் இருப்போம்.
வறுமையை அகற்றும் இடத்தில் நாம் இருப்போம். படித்தவர்களுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுக் கொள்ளும் இடத்தில் நாமிருப்போம்.
கற்பனையில் வாழ்பவர்கள் மக்களின் யதார்த்த வாழ்வு எவ்வளவு சிரமமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டின் தேசியம் கலாசாரம் உரிமை எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும்.
பௌத்த இஸ்லாம். இந்து கிறிஸ்தவ விழுமியங்களைப் பலப்படுத்த வேண்டும்.
சிங்கள பௌத்த இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ மக்களின் பிரச்சினைகள் என்ன என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டைக் கட்டியெழுப்ப சர்வதேச உதவிகள் உண்டு. உலக நாடுகள் எங்களை நம்புகின்றார்கள். அந்த நம்பிக்கையை வைத்துக் கொண்டு நாங்கள் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.
அரசியல்வாதிகளின் நேர்மையான ஒற்றுமைப்படுதல்தான் இப்பொழுது நாட்டுக்குத் தேவைப்படுகின்றது.
ஸ்ரீலசுகட்சி கூறுபட்டுவிடவில்லை. இக்கட்சி புதிய வேலைத் திட்டத்தை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தும், கட்சி புனரமைக்கபப்ட்டு மக்கள் மயப்படுத்தப்படும். ஸ்ரீலசுகட்சியை ஜனநாயகக் கட்சியாக மாற்றி பலப்படுத்துவோம்.
எமது புதிய வேலைத் திட்டத்தோடு ஒன்று சேருமாறு இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றேன்.” என்றார்.
0 Comments:
Post a Comment