8 May 2018

கிழக்கு மாகாண அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றம்

SHARE
கிழக்கு மாகாண அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்பட்டிருப்பதாக அச்சங்கத்தின் தகவல் தொடர்பு அதிகாரி வைத்தியர் எம்.ஏ. சுஹைல் அஹமட் செவ்வாய்க்கிழமை 08.05.2018 தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாம உடனான சந்திப்பில் வாக்குறுதியளிக்கப்பட்ட விடயங்கள் அமுல்படுத்தப்படாமல் உதாசீனம் செய்யப்பட்டிருந்ததால் கிழக்கு மாகாண அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கடந்த 26ஆம் திகதி கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.

தமது கோரிக்கைக்கு அமைவாக அரசாங்க வைத்தியர்களுக்கு 2018 ஜனவரியிலிருந்து அதிகரிக்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவுகள், புதிய சுற்றறிக்கையின்படி மே மாதத்திற்குரிய சம்பளப் பட்டியலில் புதிதாக மாற்றியமைக்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவு சேர்த்துக் கொள்ளப்படல், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில்; தகுதியுடைய வைத்திய நிருவாகி இல்லாததால் நோயாளிகளும், வைத்தியர்களும் ஏனைய சேவையாளர்களும் பல நிருவாக சீர்கேடுகளை அனுபவிக்கின்றனர், எனவே அங்கு தகுதியுடைய வைத்திய நிருவாகி நியமிக்கப்படல்,  திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஒரு பிரதிப் பணிப்பாளர் வெற்றிடத்திற்கு இரு பிரதிப் பணிப்பாளர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளமை போன்ற விடயங்களுக்குத் தீர்வு எட்டப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமது அமைப்பு முன்னதாக மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாடுகள் அமுலாக்கப்படாமல் உதாசினம் செய்யப்பட்டதால் தாம் வேறு வழியின்றி தொழிற்சங்க நடவடிக்கைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அது தற்போது வெற்றியளித்தள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் கிழக்கு மாகாண அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தகவல் தொடர்பு அதிகாரி வைத்தியர் எம்.ஏ. சுஹைல் அஹமட் கூறினார்.

SHARE

Author: verified_user

0 Comments: