மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு
மாவட்டம் வந்தாறுமூலை அம்பலத்தடி அருள்மிகு நீர்முகப் பிள்ளையார் ஆலய நாட்காட்டி வெளியீட்டு
நிகழ்வு ஆலய பரிபாலன சபைத் தலைவர் சி.பம்மக்குட்டி தலைமையில் தைப்பொங்கல் தினத்தன்று(15.01.2026)
வியாழக்கிழமை வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.
நீர்முகப் பிள்ளையாருக்கு முதலில் பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆலய பிரதம குருவினால் ஆசியுரை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்காட்டி வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், ஏறாவூர்பற்று பிரதேச சபை வந்தாறுமூலை வட்டார உறுப்பினர் த.பிரபாகரன், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், வந்தாறுமூலை மகா விஷ்ணு ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சா.தெய்வேந்திரக் குருக்கள், வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ மாணிக்கம் ஜெயம்பலம் குருக்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிரந்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment