6 May 2018

செவிப்புலனற்றவர் ரயிலில் மோதுண்டு மரணம்

SHARE
மட்டக்களப்பு, கூழாவடி பகுதியில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, இருதயபுரததைச் சேர்ந்த உதயன் ஜீவேந்திரன் (வயது 27) என்பவரே விபத்தில் சிக்கி மரணித்தவராகும்.

புகையிரதம் வருவதை அவதானிக்காத நிலையில்  செவிப்புலனற்ற இந்த இளைஞன் சனிக்கிழமை 05.05.2018 மாலை ரயில் பாதை வழியாக சென்றபோது அவர் மீது ரயில் மோதியதாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளது.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் இவ்விபத்து சம்பந்தமாக மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: