13 Jan 2026

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சுகாதார பரிசோதகர்கள் விசேட பரிசோதனை.

SHARE

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சுகாதார பரிசோதகர்கள் விசேட பரிசோதனை.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விசேட பரிசோனைகளை இன்று செவ்வாய்கிழமை(13.01.2026) களுவாஞ்சிகுடி நகரில் முன்னெடுத்திருந்தனர். 

களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரப் பரிசோதர்கள், உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.  இதன்போது பொருட்கள் மற்றும் பண்டங்களின் உற்பத்தி திகதி, காலாவதி திகதி, பொருட்களின் தரம், போன்ற பல விடையங்கள் தொடர்பில் மிகவும் கவனமாக ஆராய்ந்திருந்தனர். 

பட்டிருப்புத் தொதியின் வர்த்தக நகராக விளங்கும் களுவாஞ்சிகுடி நகரில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பண்டிகைக் காலங்களில் அப்பகுதியில் சனக்கூட்டம் மேலும் nதிகரித்துக் காணப்படுவதோடு, வியாபாரங்களும் கழைகட்டியிருப்பது வழக்கம். இந்நிலையில் சுகாதார பரிசோதகர்கள் தமது பரிசோதனைகளை முன்னெடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.















SHARE

Author: verified_user

0 Comments: