மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் மூன்றாவது அமர்வு எதிர்வரும் வியாழக்கிழமை (17) அன்று காலை 9.30 மணிக்கு தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உப குழுக்கள் தெரிவு, சபையினால் முன்னெடுக்கப்படும் 5 வேலைத்திட்டங்களை அனுமதித்தல், களுவாஞ்சிகுடி கடற்கரை அண்டிக் காணப்படும் குப்பை மேட்டை நிரந்தரமாக அகற்றி மூடிவிடுதல், உள்ளிட்ட பல விடையங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் செவ்வாய்க் கிழமை (15) தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment