ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இந்திய தேசியக்
கொடி பொறிக்கப்பட்ட கரையொதுங்கிய மர்மப்பொருள்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்
பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இந்திய தேசியக் கொடி பெறிக்கப்பட்ட
மர்மப்பொருள் ஒன்று இன்று காலை (03.01.2026) கரையொதுங்கியுள்ளது.
இந்திய தேசிய கொடியுடன் கரையொதுங்கிய மர்மப்பொருள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருகோணமலையிலும் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய தேசிய கொடியுடன் கரையொதுங்கிய
மர்மப்பொருள் விண்கலம் ஒன்றின் பாகமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்
ஓந்தாச்சி மடம் கடற்கரையில் கரை ஒதுங்கிய இப்பொருளை மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.



0 Comments:
Post a Comment