1 Jan 2026

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின்ல் புத்தாண்டுக்கான சத்தியப்பிரமானத்துடன் ஆரம்பமான அரச பணி

SHARE

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின்ல் புத்தாண்டுக்கான  சத்தியப்பிரமானத்துடன் ஆரம்பமான அரச பணி.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வு தவிசாளர் மே.வினோராஜ்; தலைமையில் சபையின் செயலாளர் சு.சுபாறாஜன் அவர்களின் பங்குபற்றுதலுடனும் இன்று(01) ஆரம்பிக்கப்பட்டது. 

நிகழ்வில் தேசியக்கொடி மற்றும் உள்ளுராட்சி கொடி என்பன ஏற்றபட்டதுடன் சத்தியப்பிரமாண நிகழ்வும் நடைபெற்றது. மேலும் நாட்டிற்காக உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு தவிசாளர் செயலாளரினால் சிறிய கருத்துரைகளும் இதன்போது ஆற்றப்பட்டன. 

தவிசாளர் இதன்போது துகருத்துரைக்கும் போது கடந்த வருடம் பிரதேச மக்களின் நலன் கருதி சிறப்பாக எமது சபையில் கடமையாற்றுகின்ற அனைத்து உத்தியோகத்தர்களும் செயற்பட்டிருந்தார்கள். அதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். என தெரிவித்தார். 

இதன்போது கருத்துரைத்த பிரதேச சபைச் செயலாளர்  அரச உத்தியோகத்தர்களுக்கு 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் பல சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய செயற்படுமாறும், தவிசாளர் வெள்ள அனர்த்த காலத்தின் போது களத்தில் நின்று சிறப்பாக கடமையாற்றிமைக்காகவும் தமது  நன்றியை தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.









 

SHARE

Author: verified_user

0 Comments: