16 May 2018

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

SHARE
மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள பன்குடாவெளி வாவிக் கரையோரத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 18.05.2018 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் என்ற ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து செவ்வாய்க்கிழமை 15.05.2018 வெளியிடப்பட்டுள்ள பொது அறிவித்தலில் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் உணர்வாளரே” என்று விழித்து எழுதப்பட்டுள்ள அந்த அழைப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நடைபெறவுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் இரவு 6.30 வரை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இதில் இரத்ததானம், அன்னதானம், ஆத்ம சாந்திப் பூஜை, உணர்வுபூர்வமான ஆயிரம் சுடர்கள் ஏற்றி வைத்தல் என்பனவும் இடம்பெறவுள்ளதாக அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரு குறுகிய எல்லைக்குள் நடாத்தியதாகவும் ஆனால் இவ்வருடம் பரந்தளவில் இரண்டு நாட்கள் அனுஷ்டிப்பதற்குத் தீர்மானித்துளளதாகவும் மே 17ம் திகதி இரத்ததான நிகழ்வும், 18ம் திகதி நினைவேந்தல் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியத் தலைவர் சதாசிவம் டினேஸ்காந்த் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: