முன்மாதிரி பாலர் பாடசாலையின் வருடாந்த கலை மற்றும் பரிசளிப்பு விழா.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, அவர்களின் கல்வி மற்றும் கலைத் திறமைகளைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அதிதிகளாக, காத்தான்குடி நகர சபை துணை முதல்வர் எம்.ஐ.எம்.ஜெஸீம், காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி றினோஸா முப்லிஹ்,காத்தான்குடி நகர சபை கணக்காளர் எம்.பி.எம். இத்ரீஸ், காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி றிஸ்கா சபீன், கல்முனை மாநகர சபை ஆணையாளர் முகம்மட் றாபி மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில், காத்தான்குடி நகர சபைக்கு தனது ஆலோசனைகள், பங்களிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கிவரும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களை வாழ்த்தி, பொன்னாடை போர்த்தும் நிகழ்வு காத்தான்குடி மக்கள் சார்பாக நகர சபை உறுப்பினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
விழாவின் முக்கிய அம்சமாக அமைந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. நடனம், நாடகம் மற்றும் பேச்சுப் போட்டிகளில் மாணவர்கள் வெளிப்படுத்திய அபாரமான திறமைகள் பெரும் பாராட்டுகளைப் பெற்றன.
.jpeg)
.jpeg)

.jpeg)

0 Comments:
Post a Comment