31 May 2018

நாவிதன்வெளி 15 ஆம் கிராமம் விவேகானந்தா மகா வித்தியாலய மாணவன் சாதனை

SHARE
தேசிய மட்டத்தில் நடைபெற்ற சமூகவிஞ்ஞானப் போட்டியில் சம்மாந்துறைக் கல்வி வலயத்திலுள்ள நாவிதன்வெளி கோட்டக் கல்வி அலுவலகத்தின் நிருவாகத்தின் கீழ் இயங்கும் 15 ஆம் கிராமம் கமு.சது.விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் தரம் 13 இல் கல்விபயிலும் இராஜேந்திரன் சஜித் என்ற மாணவன் தேசியமட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனைபடைத்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளிக் கோட்டத்தில் பரீட்சைப் பெறுபேறுகளில் மாத்திரமல்லாது இணைப்பாட விதானச் செயற்பாடுகளிலும் போதியளவு வசதி வாய்ப்புக்கள் இல்லாத நிலையிலும் குறித்த பாடசாலையில் கல்வி புகட்டுகின்ற ஆசிரியர்கள் காட்டுகின்ற முழுமையான ஒத்துழைப்புக்கள் மூலமாக முன்னேற்றமடைந்து பெயர் போற்றும் அளவிற்கு வளர்ச்சியடைந்து வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவனை சமூகவிஞ்ஞானப் போட்டிக்கு சிறந்தமுறையில் வழிப்படுத்திய பாடசாலையின் அதிபர் க.பேரானந்தம் அதேபோன்று பிரதிஅதிபர் மற்றும் குறித்த துறையில் தேர்ச்சியினையும் வழிகாட்டல்களையும் வழங்கிய சமூகவிஞ்ஞானப் துறைசார் பாட ஆசிரியர்கள் ஏனைய ஆசிரியர்கள் கல்விச் சமூகத்தினருக்கு பெற்றோர், பழையமாணவர் சங்கத்தினர் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: