5 May 2018

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மட்ட விளையாட்டின் மூலம் எமது பாரம்பரிய விளையாட்டுக்கள் வெளிக் கொணரப்பட்டுள்ளன –அரசாங்க அதிபர்

SHARE
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மட்ட விளையாட்டின் மூலம் எமது பாரம்பரிய விளையாட்டுக்கள் வெளிக் கொணரப்பட்டுள்ளது. என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களமும் இணைந்து நாடத்திய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கிடையிலான விளையாட்டு விழா தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டு கழகத்தின் பொது விளையாடடு மைதானத்தில் வியாழக்கிழமை (03) மாலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.

இவ் விளையாட்டு விழாவிற்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிசித்தார்.

இதன்போது மேலும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி சிறிகாந் மாவட்ட விiளாயட்டு உத்தியோகஸ்த்தர்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச சபை அதிகாரிகள், விளையாட்டுக் கழகங்கள், பிரதேசவாழ் பொதுமக்கள் என ஏராளமானோர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.



இவ்விளையாட்டு விழாவின்போது பிரதேச
செயலக உத்தியோகஸ்த்தர்கள், மற்றும் பொதுமக்கள், விiளாயட்டுக் கழகக உறுப்பினர்களிடையே பலதரப்பட்ட விiளாட்டுக்கள் இடம்பெற்றன. தமிழர்களிடத்தில் மருவி வரும் விளையாட்டுக்கள், பாரம்பரிய விiளாயாட்டுக்கள், அடங்கலாக, கயிறு இழுத்தல், கிடுபின்னுதல், கிளித்தட்டு, அஞ்சலோட்டம், வண்டில் உருட்டுதல், பலகையில் நடத்தல், போன்ற பல விளையாட்டுகள் இடம்பெற்றன.

இதன்போது களுதாவளை முதலாம் பரிவு முதலாம் இடத்தையும், மாங்காடு கிராம உத்தியோகஸ்த்தர் பிரிவு இரண்டாம இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது.

இதில் மேலும் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர்…..

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் தேசிய மட்டத்தில் பல சாதனைகளைப் படைத்த பிரதேசமாகும். அக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டுக்களில் முதன்மை இடத்தைப் பிடித்திருப்பது இந்த மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேசம்தான்.  இன்னும் இரு வாரத்தினுள் மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. அதிலும் இப்பிரதேசம் முதலிடம் பெறும் என எதிர்பார்க்கின்றேன். 

இப்பிரதேசத்தில் ஆண்கள் மாத்திரமின்றி பெண்களும் மிகவும் உற்சாத்துடனும், விருப்புடனும், உத்வேகத்துடனும், விiளாயட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றமை வரவேற்கத்தக்கதாகும். இருந்த போதிலும் மேலும் விளையாட்டு வீர வீராங்கணைகளுக்கு சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்து பயிற்றுவிக்க வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறு பயிற்சிகளை வழங்கி வந்தால் மென் மேலும் மாகாண மட்டம், தேசிய மட்டத்திலும் சாதனைபடைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிரித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பெயர் வெளிக்கொணரப்படும்.

இப்பிரதேசத்தில் விளையாட்டுத்துறையைக் கட்டியெழுப்ப வேண்டியதாகவுள்ளது. ஒரு காலத்தில் மட்டக்களப்பு மாவட்டம் மெய்வல்லுனர் போட்டிகளில் மாத்திரமின்றி வாஸ்கட் வோல், புட்போல், போன் விளையாட்டுக்களில் முன்னணியில் திகழ்ந்து. தற்போது அது மங்கிக் கொண்டு வருகின்றது. தற்போது சில போட்டிகளில் மாத்திரம்தான் நாம் முன்னணியில் இருக்கின்றோம். எனவே அனைவரினதும் ஒத்துழைப்புடனும் அனைத்துத் துறைகளையும் நாம் வெளிக் கொணரவேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: