18 Apr 2018

போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் கன்னியமர்வு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச சபைக்குரிய கன்னி அமர்வு புதன்கிழமை (18) தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதித் தவிசாளர் என்.தருமலிங்கம் உட்பட்ட சபையின் 18 உறுப்பினர்களும், சபையின் செயலாளர் அ.ஆதித்தனும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது போரதீவுப்பற்றுப் பிரதேச சபைக்கு வருமானமீட்டுதல் தொடர்பான செயற்றிட்டங்கள் உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
அந்த வகையில்… போரதீவுப்பற்றுப் பிரதேசத்திலுள்ள மயானங்களுக்கு எல்லைகள் இட்டுதல், வீதிகளுக்கு மின் விளக்குகளைப் பொருத்துதல், வெளிடங்களிலிருந்து இப்பிரதேசத்திற்கு வந்து மண் அகழ்வதற்குரிய அனுமதி வழங்குவதை நிறுத்துதல், கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்தல், மண்டூர் வைத்தியசாலையில் வாகனப் பாதுகாப்பு நிலையம் ஒன்றை அமைத்தல், மாதாந்தம் ஒவ்வொரு 3 ஆம் திகதியும், காலை 9.30 மணிக்கு சபை அமர்வுகளை நடாத்துதல், அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து அனைத்து வட்டாரங்களுக்கும் சென்று மக்களின் குறை நிறைகளைக் கேட்டறிதல், இறைச்சிக் கடைகளை அமைத்தல், போன்ற தீர்மானங்கள் எடுக்கபட்டதோடு,

போரதீவுப்பற்றுப் பிரதேச எல்லையினுள் மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் அமைத்துவரும் ஆலயம் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

கட்சி போதங்களுக்கு அப்பால் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையுடனும், ஒருமித்தும் செயற்பட முன்வரவேண்டும் என இதன்போது தவிசாளர் அனைத்து உறுப்பினர்களிடமும் கேட்டுக் கொண்டார்.
















SHARE

Author: verified_user

0 Comments: