மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் கன்னி அமர்வு புதன்கிழமை (25) பிரதேச சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் நடைபெற்றது. பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட 21 உறுப்பினர்களும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
மௌன இறைவணக்கத்தின் பின்னர், தவிசாளரின் தலைமையுரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதேசத்தில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பாக பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த வகையில் இப்பிரதேசத்தில் வீதி விளக்குகள் இல்லாத இடங்களுக்கு மின் விளக்குகளைப் பெருத்துவதற்காக வேண்டி 300 மின்குமிழ்களைக் கொள்வனவு செய்தல்.
காரியாலய அவசர தேவைகளுக்காக 5000 ரூபாய் ஒதுக்கீடு செய்தல்.
2019 ஆம் ஆண்டு வரவு செயலவுத்திட்டம் தயாரிப்பதற்கு அனுமதியளித்தல்.
மாதாந்தம் மூன்றாம் வாரத்தில் வரும் வியாழக் கிழமைகளில் சபை அமர்வுகளை நடாத்துதல்.
திண்மக்கழிவகற்றும் ஊழியர்களை பிரதேச சபை உழியர்களாக நியமித்தல்.
தற்போதிருக்கும் அலுவலகத்தில் போதிய இடவசதி போதாமையினால் புதிய கட்டடம் ஒன்றைப் பெறுவதற்கு முயற்சித்தல்.
மாகாணசபைகள், உள்ளுராட்சி அமைச்சினால் கோரப்பட்டுள்ள மூலதன வேலைத்திட்டத்திற்கு அனுமதியளித்தல்,
பழுதடைந்துள்ள மோட்டார் சைக்கிள், ஜே.சி.பி, மற்றும் மோட்டக் கிறைண்டர் ஆகிய வாகனங்களைத் திருத்துவதற்குரிய கண்கீடுகளை மேற்கொள்ளல்.
பழுதடைந்துள்ள வீதிகளைத் திருத்துவதற்காகவேண்டி ஒருதொகை கிறவலை ஏற்றி சேமித்து வைத்திருத்தல்.
உள்ளிட்ட பல தீர்மானங்கள் சபை உறுப்பினர்களிடையே கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment