1 Apr 2018

அரசியல் தீர்வுக்கு தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதே தந்தை செல்வாவின் கருத்து

SHARE
இந்த நாட்டில் அரசியல் பிரச்சனை தீர்வு வர வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ்ப் பேசுகின்ற மக்கள் ஒன்றாக வேண்டும் என்பதையே தந்தை செல்வா கூறியிருந்தார் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா தெரிவித்தார்.
இன்றைய தினம் மட்டக்களப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 120வது பிறந்த தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமக்கு வருகின்ற விமர்சனங்களை எல்லாம் நாங்கள் சிந்தித்துக் கையாள வேண்டியவர்ளாக இருக்கின்றோம். பிரதேசவாதங்களுக்கெல்லாம் நாங்கள் காது கொடுக்காது வடக்கு கிழக்கு எங்கள் தமிழர் தாயகம் என்ற ஒரு அடிப்படையிலே நாங்கள் முடிவெடுக்க வேண்டியவர்களாகவும், சிந்திக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.
இது இன்றல்ல, நேற்றல்ல தந்தை செல்வா அவர்கள் இந்த நாட்டில் அரசியல் பிரச்சனை தீர்வு வர வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ்ப் பேசுகின்ற மக்கள் ஒன்றாக வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் தமிழர்கள் நாங்கள், தமிழ்ப் பேசுகின்ற மக்கள் நாங்கள் என்ற ரீதியில் ஏதோவொரு அடிப்படையில் இதற்குத் தீர்வு காண வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
அதற்காக நாங்கள் எமது கட்சிக்கு ஆதரவு வழங்கி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நடைமுறைகளை ஆதரித்து இனிமேலும் காலம் கடத்தாமல் இருக்கின்ற தலைமைகளைக் கொண்டு எமது விடயத்தைக் கட்சிதமாக முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: