மட்டக்களப்பு மாவட்ட வெசாக் வைபவம், இம்முறை மங்களகம ஸ்ரீ தர்மராமய விகாரையில் விகாராதிபதி வண.பி.சந்தரத்தன ஹிமியின் ஆசிகளுடன் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் எதிர்வரும் 29ஆம் திகதி நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
செங்கலடி பிரதேச செயலகம் இதற்கான சகல ஒழுங்குகளையும் ஏற்பாடு செய்து வருவதாக பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெத்தினம் மாவட்ட அரசாங்கத் தகவல் திணைக்களத்திற்குத் தெரிவித்தார்.
வெசாக் காட்சிப் பந்தல்கள் கண்காட்சியும், காட்சிப் பந்தல்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள திணைக்களங்கள், நிறுவனங்கள், தனியார் மற்றும் அனைவரும் பங்குகொள்ள முடியும்.
பிற்பகல் 6 மணிக்கு வைபவ ரீதியாக வெசாக் காட்சிப் பந்தல்கள் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரால் ஒளியூட்டி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
வெசாக் பந்தல் அலங்காரங்களுக்கென பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனைத் தீர்மானிப்பதற்கென நடுவர் குழுவினரால் புள்ளிகள் வழங்கப்பட்டு போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசில்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி மு.ரஞ்சினி தெரிவித்தார்.
வெசாக் நிகழ்வுகள் 29.04.2018 அன்று காலை 6 மணிக்கு ஆரம்பமாகி பிரித்பாராயண மற்றும் வெசாக் நிகழ்வுகள் நடைபெற்று பிற்பகல் 6 மணிக்கு வெசாக் அலங்காரப் பந்தல்கள் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
வெசாக் நிகழ்வுகள் வரிசையில் காலை 6 மணி முதல் சீலம் அனுஸ்டித்தல், பௌத்த சமய போதனை, பௌத்த சாசன பூசை, பௌத்த சமய போதனையும் கருத்தரங்கும், தீப ஒளிப் பூசை, தலைமைப்பீடம் வேலைகளை ஆரம்பித்தல், அரசாங்க அதிபரின் உரை, வெசாக் கூடு கண்காட்சியும் போட்டி நிகழ்வும், பக்திப்பாடல் இசை நிகழ்ச்சி ஆகியன இரவு 9.30 மணிவரையில் இடம்பெறவுள்ளது.
0 Comments:
Post a Comment