மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி - வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுப்பு.
இதுவரையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி மாவட்டம்தின் வாக்களிப்பு 68 வீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகர சபை இரண்டு நகர சபைகள் 9 பிரதேச சபைகள் உள்ளிட்ட 12 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று சனி;கிழமை (10) காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெற்றது.
இத்தேர்தலில் 238 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 901 பெண் வேட்பாளர்கள் உட்பட 2736 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இம் முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 380,327 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
457 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புக்கள் இடம் பெற்றன.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 144 வட்டாரங்களில் 120 கொத்தணி வாக்கெண்ணும் நிலையங்களாக அமைக்கப்பட்டுள்ளதோடு மேலும் 24 வாக்குச் சாவடிகள் தனிப்பட்ட ரீதியாக அந்தந்த வாக்குச் சாடிவகளிலும் வாக்கெண்ணுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் தேர்தலுக்கான மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலுக்காக 4437 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேர்தலை கண்காணிப்பதற்காக பெப்ரல், சி.எம்.இ.வி, கபே மற்றும் ட்ராண்ஸ் பேரன்சி இண்ர நெசனல் போன்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள் கண் காணிப்பாளர்களாக செயற்பபட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸ் திணைக்களம் மேற் கொண்டுள்ளது.
0 Comments:
Post a Comment