மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபைக்கான தேர்தலில் சாராயம் கொடுத்து வாக்கு வேட்டை நடப்பதாக பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கமான 119 இற்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
வாக்களிப்பு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சனிக்கிழமை 10.02.2018 நண்பகலுக்கு முன்னர் இவ்விதம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள குமாரவேலியார் கிராமம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியை அண்டிய பகுதியொன்றில் வைத்து மறைமுகமான முறையில் தமிழ் கட்சியொன்றைச் சேர்ந்தோர் மாற்றுக் கட்சி ஆதரவாளர்களுக்கு சாராயத்தை வழங்கி வாக்கு வேட்டையில் ஈடுபடுவதாக பொலிஸ் அவசரப் பிரிவுக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளனர்.
இதுபற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment