மட்டக்களப்பு மாநகர சபையின் அரசடி 10ஆம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஊடகவியலாளரும் சமூக சேவகருமான சிவம் பாக்கியநாதன் மாநகர சபைப் பிரிவில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அளிக்கப்பட்ட வாக்குகளில் இவருக்கு 1333 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மாநகர சபைப் பிரிவில் போட்டியிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளை விட இது அதி கூடியதாகும்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சுயேட்சைக்குழுவாகவும், கட்சிகளோடு இணைந்தும் ஒரு பெண் உட்பட மேலும் 5 ஊடகவியலாளர்கள் போட்டியிட்ட போதும் அவர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வெற்றி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பாக்கியநாதன், இன மத மொழி மற்றும் கட்சி அரசியல் பேதம் கடந்த சேவகனாக மக்கள் என்னைத் தெரிவு செய்துள்ளார்கள்.
20 வட்டாரங்களைக் கொண்ட மட்டக்களப்பு மாநகரசபைப் பிரிவில் அரசடி 10ஆம் வட்டாரமானது ஏனைய 19 வட்டாரங்களை விட இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான nனை;து சமூகங்களும் வாழும் முக்கிய வட்டாரமாகத் திகழ்கின்றது.
பன்மைத்துவக் கலாசாரம் உள்ள இந்த வட்டாரத்தில் இந்து ஆலயங்கள், மங்களராமய விகாரை, சென் செபஸ்தியார் தேவாலம், மற்றும் யூஸ{பியா பள்ளிவாசல் ஆகிய மதத் தலங்கள் அமையப்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
எனவே நாம் மதத்தால், இனத்தால் பிளவுபட்டு நிற்க வேண்டிய தேவை இல்லை சேவையால் ஒன்றுபடுவதே சிறந்தது” என்றார்.
0 Comments:
Post a Comment