3 Feb 2018

நாங்கள் தமிழீழத்தையும் கேட்கவில்லை – சம்பந்தன்

SHARE
நாங்கள் நிற்சயமாக ஒற்றையாட்சியை ஏற்கப்போவதில்லை, அதேசமயம் நாங்கள் தமிழீழத்தையும் கேட்கவில்லை, ஒருமித்த நாட்டுக்குள் பிரிபடாத நாட்டுக்குள் பிரிபட முடியாத நாட்டுக்குள் எமது இறையாண்மையின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் நாங்கள் இந்த நாட்டுக்குள் சமஅதிகாரத்துடன் வாழ்வதற்கு எமக்கு உரித்துண்டு.
என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் அவர்கள் தெரிவித்தார்.
உள்ளுராட்சி வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை மாலை (02) களுவாஞ்சிகுடியில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் அவர் தலையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

இத்தேர்தலின் பின்னர்  ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக இணைந்து அரசியல்சாசனத்தை உருவாக்குவதற்கும் அத்தோடு பெரும்பான்மையின மக்களுக்கு உண்மையை விளக்குவதற்கும் அவர்கள் முயற்சிக்க வேண்டும்;. அந்த கருமத்தை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். நிறை வேற்றாவிட்டால் 
நாங்கள் ஒரு உள்ளுராட்சி மன்றத்தேர்தலை எதிர் நேக்கிக் கொண்டு இருக்கின்றோம். இது ஒரு சாதாரணமான உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அல்ல இன்று நாட்டில் இருக்கின்ற சூழலின் அடிப்படையில் சர்வதேசம் சம்பந்தமாக இது ஒரு முக்கியமான தேர்தல் என நான்கருதுகின்றேன்.
இந்த நாட்டின் பெரும் தலைவர்கள் இந்த தேர்தலில் மிகவும் அற்பணிப்போடு செயற்பட்டு வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி உட்பட முன்னாள் ஜனாதிபதி இந்த தேர்தல் மிகவும் முக்கியமானதொரு தேர்தல் எனவும் இந்த நாட்டில் ஒற்றையாட்சி மலரப்போகின்றதா? அல்லது தமிழீழம் மலரப்போகின்றதா என்பதை தீர்மானிக்கின்ற தேர்தல் என கூறியிருக்கின்றார். இவர் இதனை ஏன் கூறுகின்றார் என்றால் எமக்கு அரசாங்கம் வழங்கப்போகும் தீர்வின் மூலம் தமிழீழம் மலரும் என்ற கருத்துப்பட இதனை கூறியிருக்கின்றார்.
நாங்கள் நிற்சயமாக ஒற்றையாட்சியை ஏற்கப்போவதில்லை, அதேசமயம் நாங்கள் தமிழீழத்தையும் கேட்கவில்லை, ஒருமித்த நாட்டுக்குள் பிரிபடாத நாட்டுக்குள் பிரிபட முடியாத நாட்டுக்குள் எமது இறையாண்மையின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் நாங்கள் இந்த நாட்டுக்குள் சமஅதிகாரத்துடன் வாழ்வதற்கு எமக்கு உரித்துண்டு. அது அங்கிகரிக்கப்பட வேண்டும். இது சாதாரண உரிமையல்ல ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையால் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களாகும்.
யாழ்ப்பாணத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங்கிமூன் அவர்களை நாங்கள் சந்தித்தோம். நான் அவரிடம் கூறினேன் இங்கு நடைபெறுகின்ற ஆட்சி எமது இறையாண்மைக்கு அப்பாற்பட்ட ஆட்சி இது எமது சம்மத்துடன் இணக்கப்பட்டுடன் சர்வதேசத்தின் அடிப்டையில் நாங்கள் ஏற்றுக்கொண்ட ஆட்சியல்ல இதனை தொடரமுடியாது என நான் ஆணித்தரமாக கூறியிருந்தேன்.
தற்போது அரசியல் தீர்வுக்கான வேலைகள் நடைபெறுகின்றது அது வெற்றி பெறவேண்டும் அதற்கு நாங்கள் போதிய ஒத்துழைப்பை நல்குகின்றோம். ஆனால் அவர்களின் தவறின் காரணமாக இந்த கருமம் நிறைவேற்றப்படவிட்டால் இந்த நிலமையை தொடரமுடியாது எம்மீது திணிக்கப்பட்ட ஒரு ஆட்சியை தொடர்ந்து ஏற்றுக்கொள்ள அவசியமில்லை அதற்கு எதிராக நாங்கள் அந்த ஆட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என சொல்லி வைப்பதில் தவறில்லை என நான் கூறினேன். இதுதான் நிலமை. 
அதன் அடிப்படையில்தான் தற்பொழுது ஒரு புதிய அரசியல் சானத்தை உருவாக்குவதற்கான நடவடிக்ககைள் நடைபெற்று வருகின்றது. இந்த அரசியல் சாசனம் எமக்குத்தேவை இந்த நாட்டில் வாழுகின்ற அனைவருக்கும் தேவை இந்த நாட்டிற்கு தேவை ஒரு புதிய அரசியல் சாசனம் இல்லாமல் இந்த நாடே சீரழிந்து வருகின்றது.
இத்தேர்தலின் பின்னர் நாங்கள் நினைக்கின்றோம் ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக இணைந்து அரசியல்சாசனத்தை உருவாக்குவதற்கும் அத்தோடு பெரும்பான்மையின மக்களுக்கு உண்மையை விளக்குவதற்கும் அவர்கள் முயற்சிக்க வேண்டும்;. அந்த கருமத்தை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். அது இந்த நாட்டிற்கு ஒரு அத்தியாவசியமான தேவை நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் ஒரு அத்தியாவசியமான தேவை எமது மக்கள் 2015 ஆம் ஆண்டு வாக்களித்து ஒரு மாற்றத்தினை ஏற்படுத்திய பொழு எமது மக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நாட்டில் புதிய ஆட்சி ஏற்றபட்டவுடன் ஒரு புதிய ஆட்சிமுறை உருவாகும் அந்த ஆட்சிமுறையின் கீழ் நாங்கள் சமத்துவமாக, சமாதனமாக, சுயமரியாதையுடன் இந்த நாட்டில் சம பிரஜைகளாக வாழ்வோம் என்ற நம்பிக்கை அந்த மக்களுக்கு ஏற்பட்டது. அது நிறைவேற்றப்படவேண்டும். அது நிறைவேற்றப்படாதுவிட்டால் இந்த நாட்டிற்கு எதிர்காலம் இல்லை அதுதான் உண்மை.
நான் பலதரப்பட்ட இராஜதந்திரிகளை சந்தித்து வருகின்றேன். அவர்களிடம் இதனை நான் விளக்கி வருகின்றேன். அவர்கள் எமக்கு சாதகமாக இருக்கின்ற வேளையில், நாங்கள் 1956 ஆம் தொடக்கம் இன்யில் எமது கொள்கையில் இருந்து மாறவில்லை மாறமாட்டடோம், அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். நாங்கள் மாறவேண்டிய தேவையில்லை. ஆனால் ஒருமித்த பிரிக்கப்படாத நாட்டுக்குள் நாங்கள் சமபிரஜையாக வாழ்வதற்கு விரும்புகின்றோம். அதற்கு எமது உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட்டு அதிகார பகிர்வு மூலமாக எங்களுக்கு போதிய அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் இதுவே எமது முடிவு. இந்த தேர்தல்முடிவு அதனை ஊர்ஜிதப்படுத்த வேண்டும். இந்த செய்தி சர்வதேசத்திற்கு போகவேணடும் உங்களை அன்பாகவும் கேட்டு கொள்வது என்ன வென்றால் வீட்டுக்கு வாக்களித்து எமக்க திடமான வெற்றியை நீங்கள் வழங்க வேண்டும் என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: