3 Feb 2018

அழிவுகளுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்தது இந்த இரண்டு கட்சிகளும்தான் - சித்தார்த்தன்.

SHARE
அழிவுகளுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்தவர்களான இந்த இரண்டு கட்சிகளும், ஏதோ தாங்கள்தான் தமிழர்களுக்கு உரிமைகளை வென்று தரப்போகின்றவர்கள் என்று போலவும், இந்தப் பகுதிகளெல்லாம், அபிவிருத்தி செய்ய என்னிடம் தாருங்கள் என அங்கிருந்து இங்கு வந்து கேட்கின்றார்கள்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளட் அமைப்பின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் களுவாஞ்சிகுடியில் வெள்ளிக்கிழமை (02) மாலை நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவ்ர இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இதில் மேலும் தெரிவிக்கையில்…..

கடந்த கலத்தில் எமது மக்களின் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் அழிவுகளுக்கும் எந்தக் கட்சிகள் காரணங்காக இருந்தனவோ  அந்த இரண்டு கட்சிகளும், எங்களை மாறி மாறி ஆட்ட வந்த கட்சிகள். சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் 1949 இலே இந்திய பாக்கிஸ்தானிய பிரியோரிமைச் சட்டம், 1956 இலே சிங்களம் மாத்திரம், 1970 இலே தரப்படுத்தல் என இவ்வாறு ஒவn;வாரு விடையமாக தமிழ் மக்களை இரண்டாம்தரப் பிரஜைகளாக அடிமைகளாக மாற்றுவதற்கு ஒவ்வொரு சட்டத்தையும் இயற்றினார்கள்.

இவைமாத்திரமின்றி ஒவ்வொரு வன்முறைகளையும், தூண்டிவிட்டு, தமிழர்கள் துன்பப்படுகின்ற காலங்களிலே சாத்வீக ரீதியிலே உரிமைகளை வென்றெடுக்கலாம் என்ற போர்வையிலே அந்தக் காலத்தில் தந்தை செல்வநாயகம் அவர்களின் தலைமையிலே நடாத்தப்பட்ட சாத்வீகப் போராட்டங்களெல்லாம் ஆயுதங்களால் அடக்கப்பட்ட போது, ஆயுதத்திற்கு அயுதந்தாம் பதிலாக இருக்கும் என்று எமது தலைவர் உமா மகேஸ்வரன் தொடக்கம் தலைவர் பிரபாகரன் வரைக்கும், பத்பநபா போன்றவர்கள் ஒரு உணர்வுடன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள், அந்த அழிவுகளுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்தவர்களான இந்த இரண்டு கட்சிகளும், ஏதோ தாங்கள்தான் தமிழர்களுக்கு உரிமைகளை வென்று தரப்போகின்றவர்கள் என்பது போலவும், இந்தப் பகுதிகளெல்லாம், அபிவிருத்தி செய்ய என்னிடம் தாருங்கள் என அங்கிருந்து இங்கு வந்து கேட்கின்றார்கள். 

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு அங்கிருந்து இங்கு வந்து ரணில் விக்கிரம சிங்க பிரச்சாரம் செய்கின்றார் என்றால் இந்த தேர்தலுக்கு அவர் கொடுத்திருக்கின்ற முக்கியத்துவத்தை மக்கள் நன்கு அறிவார்கள். 

புதிய அரசியலமைப்பு தொடர்பான பிரச்சனை, காணாமல் போனவர்களின் பிரச்சனை, அரசியல் கைதிகளின் பிரச்சனை, காணிவிடுவிப்பு பிரச்சனை, காணி அபகரிப்புப் பிரச்சனை உ;ளளிட்டவைகடுக்கெல்லாம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மிகப்பெரிய அழுத்தங்களைக் தேசிய ரீதியில் மாத்திரமின்றி, சர்வதேச ரீதியிலும், கொடுத்ததனால்தான் ஐக்கிய நாடுகள் சபையிலே அந்த தீர்மானங்கள் இவற்றுக்கான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்று நிறைவேற்றப்பட்டு இலங்கை அரசின்மேல் பல அழுத்தங்கைள பல நாடுகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றநார்கள் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: