ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் அமைப்பாளரும், களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, மற்றும் பட்டிப்பளைப் பிரதேசங்களின் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான இராசமாணிக்கம் சாணக்கியன் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை (02) மாலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா, உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்த்தகர்கள் பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தனுக்கு இராசமாணிக்கம் சாணக்கியன் பொன்னாடை போர்த்தி கௌரவித்து விட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து, கொண்டு கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியன் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் சீ.மூ.இராசமாணிக்கத்தின் பேரனும், சீ.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளருமாவார்.
தான் ஸ்ரீ லங்க சுதந்திரக் கட்சியிலிருந்து விலக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இராசமாணிக்கம் சாணக்கியன்…..
இக்காலகட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய காலமாகும், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வர இருக்கின்ற இந்நேரத்தில் தமிழ் மக்கள் ஒற்றுடையுடன் இருந்தால்தான் சர்வதேர ரீதியிலும், இலங்கை ரீதியிலும், தமிழ் மக்களின் ஆதரவு பெற்ற கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று தமிழ் மக்களி உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்பாக அமையும். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment