கொக்கட்டிச்சோலை கிராமத்தில் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை திருடிசென்ற இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவி-த்தனர்.
சனிக்கிழமை 17.02.2018 இடம்பெற்ற இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, கொக்கட்டிச்சோலை கிராமத்திலுள்ள பெண்ணொருவரின் கடைக்குச் சென்ற இளைஞர்கள் இருவர் அங்கு பொருட்கள் கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்து கடைக்காரப் பெண் அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
அவ்வேளையில் பெண் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு வீதியால் சென்றோரும் அயலவர்களும் வீதிக்கு ஓடிவந்து தப்பிச் செல்லும் இளைஞர்களை பின்தொடர்ந்து துரத்திச் சென்று பிடித்து வந்து நையப்புடைத்ததுடன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களிடம் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment