மட்டக்களப்பு- ஏறாவூர் நகரைச் சேர்ந்த மிருக வைத்தியரான சர்ஜுன் ஹாபிஸ் என்பவருக்கு அமெரிக்காவில் “இளம் ஆராய்ச்சியாளர்" என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர், ஓடாவியார் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட மிருக வைத்தியர் சர்ஜுன், தனது மேற்படிப்பை கனடாவிலிருக்கும் University of Calgary என்ற பல்கலைக் கழத்தில் ( Phd in Virology) தொடர்கிறார்.
இப் பல்லைக்கழகத்தில் உயர் கற்கை நெறியை மேற்கொள்ளும் இவர் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பாராட்டுதல்ளைப் பெற்றுள்ளார்.
அதேவேளை கடந்த வாரம் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச விஞ்ஞான தொழில் நுட்ப மாநாட்டில் இவரால் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞானபூர்வ துறைசார்ந்த நிபுணத்துவ ஆராய்ச்சிகள் சமர்ப்பிக்கப்பட்டன.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 394 புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இம் மாநாட்டில் சமர்பிக்கப்பட்ட வேளையில், இவரது “இன்புழுவென்சா H1N1எச்1 என்1 வைரஸ்" எனும் பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் சம்பந்தமான ஆய்வு இம்மாநாட்டில் சமர்பிக்கப்பட்டது.
அக்கண்டுபிடிப்புத்தான் அம் மாநாட்டில் முதலிடத்தை பெற்றுக்கொண்டது.
அமெரிக்கா, லண்டன், இத்தாலி, கனடா, ஜப்பான், ஜேர்மனி, கொரியா, சீனா, எகிப்து, பிரான்ஸ், ஸ்பெயின், நியூசிலாந்து போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும் கலந்து கொண்ட புதிய கண்டு பிடிப்பாளர் வரிசையில் இவர் இளம் கண்டு பிடிப்பாளர் என்ற கௌரவப்பட்டத்தோடு பணப்பரிசில்களும் வழங்கி பாராட்டப்பட்டார்.
0 Comments:
Post a Comment