தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை (02) மாலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா, புளட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், சதாசிவம் வியாளேந்திரன். மற்றும், வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மற்றும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நடாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், கட்சியின் அங்கத்தவர்கள், உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
களுவாஞ்சிகுடி பிரதான வீதியருகில் அமைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர்.சீ.மூ.இராசமாணிக்கத்தின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பரப்புரைக் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள் மக்களுக்கு நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் விளக்கவுரை வழங்கினர்.
0 Comments:
Post a Comment