7 Feb 2018

தேசியக் கட்சிகளின் அடையாளங்களை நிலைநாட்டுவதற்காகவே தமிழ் பிரதேசங்களில் தேர்தல் கேட்கின்றார்கள் - சாணக்கியன்.

SHARE

 தேர்தல் காலத்தில் மாத்திரம் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு தேசியக் கட்சிகள் வந்து, அவர்களுக்கு இங்கும் அடையாளம் வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் பயன்படுத்தப் படுகின்றார்கள். உதாரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கோ மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேச சபை உறுப்பினர் இருக்கின்றார் என்று சொல்ல முடியாது என்றால் அது அவர்களுக்கு அவமானமாகத்தான் அமையும், இதன் காரணமாகத்தான் இந்த மாவட்டத்தில் அவர்ளுடைய அடையாளம் இருக்க வேண்டும் அதற்காகத்தான் அக்கட்சிகள் இங்கு போட்டியிடுகின்றார்கள்.என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ள இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் திங்கட் கிழமை (05) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து நடைபெற்ற உடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்……



கடந்த 5 வருடங்களாக நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளராக இருந்து அரசியல் ரீதியாகவும், அபிவிருதி ரீதியாகவும் செற்பட்டு வந்தேன். இவ்வாறு உடல் ரீதியாக  நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தாலும், உள்ளத்திற்குள்  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் எனது ஆதரவு இருந்து வந்தது. ஆனால் தற்போதுதான் அந்த சந்தர்ப்பம் எனக்கு அமைந்துள்ளது. கடந்த 2017.12.13 அன்றிலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளர் என்ற பதவியிலிருந்து விலகி சீ.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினூடாக இத்தொகுதி மக்களுக்கு பணி செய்து வருகின்றேன். தற்போது நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தாமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு என்னுடைய ஆதரவை வழங்க வேண்டும் என நான் முடிவை எடுத்துள்ளேன். ஏனெனில் இந்த தேர்தலில் தமிழ் மக்களின் ஒற்றுமையைக் காட்டினால்தாலதான் தேசி ரீதியிலும், சர்வதேச ரீதியிலும், முன் வைக்கப்பட்டுள்ள நமது மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் கொண்டு வருவதற்கு, சம்மந்தன் ஐயா வின் கீழுள்ள ஏனைய தலைவர்கள் முன்நெடுக்கும் நடவடிக்கைக்கு உந்து சக்தியளிக்கும செயற்பாடாக அமையும்.

இந்த தேர்தலை மையமாக வைத்து சர்வதேச ரீதியாக பல கருத்துக்கள் வெளிவரும், இந்த தேர்தலின் முடிவுகள்தான் சம்மந்தன் ஐயா தலைமையில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தைகளுக்கும், முன்னெடுப்பக்களுக்கும், ஒரு முக்கியமானதாக அமையும். இவ்வேளையில் தமிழர்கள் வெவ்வேறு கட்சிகளில் பிரிந்து பிரிந்து செய்றால் அது தமிழ் மக்களுக்கு நல்லதாக அமையாது.

இந்த தேர்தலில் பல கட்சிகளின் வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் பலவிதமான வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கின்றார்கள். இந்நிலையில் வடக்குக் கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 99 வீதம் வெற்றிபெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட விடையமாகும்.  உள்ளுராட்சி மன்றத்தில் எதிர்க் கட்சியிலிருந்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது, இந்நிலையில்தான் எதிர்காலத்திலும் நடைபெறவுள்ள தேர்தல்களில் நடைபெறும் பிழைகளுக்கு நானும் ஒரு பங்காளியாக இருக்க விரும்பவில்லை. இக்காலகட்டத்தில் சம்மந்தன் ஐயாவின் கரங்களைப் பலப்படுத்தி இலங்கை அரசுக்குக் கொடுக்கக் கூடிய அழுத்தத்தைப் பலமாக்கலாம். பண்டா செல்லா, ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் போன்று தற்போது நடைபெறும் செயற்பாடுகளை சம்மந்தன் மைத்திரி ஒப்பந்தம் என்றுகூடச் சொல்லலாம். இந்த நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நிறைவு பெற இருக்கின்ற ஒன்றரை வருடத்திற்குள் உள்ளன இக்காலகட்டத்தினுள் கிடைக்கின்ற தீர்வுதான் ஒரு நிரந்தரத் தீர்வாக இருக்கும்.

தேர்தல் காலத்தில் மாத்திரம் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு தேசியக் கட்சிகள் வந்து, அவர்களுக்கு இங்கும் அடையாளம் வேண்டும என்பதற்காக தமிழ் மக்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள். உதாரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கோ மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேச சபை உறுப்பினர் இருக்கின்றார் என்று சொல்ல முடியாது என்றால் அது அவர்களுக்கு அவமானமாகத்தான் அமையும், இதன் காரணமாகத்தான் இந்த மாவட்டத்தில் அவர்ளுடைய அடையாளம் இருக்க வேண்டும் அதற்காகத்தான் அக்கட்சிகள் இங்கு போட்டியிடுகின்றார்கள்.

தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தலைவரை வளர்த்துவிட வேண்டும் என்ற நோக்கம் எந்த தேசிய அரசியல் கட்சிகளுக்கும் இல்லை.  உண்மையிலே ஐக்கிய தேசியக் கட்சியில் இப்பிரதேசத்தில் போட்டியிடுகின்ற ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்றார்களா, அல்லது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்திருக்கின்ற மாற்று இனத்தைப் பிரதிபலிக்கின்ற கட்சியில் இருக்கின்றார்களா என்பது தெரியாதுள்ளது. 

தமிழ் தேசியக் கூட்டமைபிலிருக்கின்ற உறுப்பினர்களும் பல அபிவிருத்தித்திட்டங்களை மேற்கொண்டுள்ளார்கள், இவ்வாறு அபிவிருதிகளையும் மேற்கொண்டு உரிமைகளையும், பெற்றெடுக்கும் பாதையில்தான் நாம் தற்போது சென்று கொண்டிருக்கின்றோம். இக்காலலட்டத்தில் தமிழ் மக்கள் ஒன்றுமையுடன் செயற்பட வேண்டும். இந்நிலையிலும் எமது தலைவர் சம்மந்தன் ஐய்யாவின் கீழ் எனது அரசியல் பயணத்தையும் தொடர்வதற்குக் கிடைந்த இச்சந்தர்ப்பத்திற்கு நான் சந்தோசமடைகின்றேன்.

வெவ்வேறு காரணங்களுக்காக அவர்களது சுயநலங்களுக்காகத்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்;பிலிருந்து சிலர் வெளியேறியுள்ளவர்கள். இந்நிலையில் மக்களின் நலன் கருத்தித்தான் நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைகின்றேன். இதனை விட தனிப்பட்ட ரீதியான எந்தக் காரணங்களும் கிடையாது. 

பட்டிருப்புத் தொகுதியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாததனால் மக்கள் சிதறிப்போயுள்ளார்கள், இவற்றைவிட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் என்ன பேச்சுவார்த்தை செய்கின்றது என்ற விழிப்புணர்வும் மக்களுக்குப் போதாது, இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்ளைகள், உள்ளிட்ட செயற்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்குள்ளேன். கூட்டமைப்புக்கும் மக்களுக்கும், இடையில் ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைப்பதற்கும் எனது செய்றபாடுகள் அமையும்.

எனவே நான் தற்போது வீட்டுக்குள் வந்துள்ளேன் இனிமேல் வேறு எங்கேயும் போகும் நோக்கம் எனக்கில்லை. என அவர் இதன்போது தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் அமைப்பாளரும், களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, மற்றும் பட்டிப்பளைப் பிரதேசங்களின் முன்னாள் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான இராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த வெள்ளிக்கிழமை (02) மாலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது அக்கூட்டமைப்பில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

SHARE

Author: verified_user

0 Comments: