கொக்கட்டிச்சோலை பொலிஸ்ப் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்த இடங்கள் புதன்கிழமை (07) முற்றுகையிடப்பட்டு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இளைஞர்களின் உதவியுடன், இதன்போது, கொக்கட்டிச்சோலை பொலிசாரினால் பாத்திரங்கள், சிலிண்டர் போன்ற பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கிராமத்தில் இடம்பெறும், சட்டவிரோத கசிப்பு உற்பத்தியினை முற்றுமுழுதாக நிறுத்த வேண்டுமென்ற இளைஞர்களின் உத்வேகத்தினால் சனிக்கிழமை (06) மற்றும் புதன் கிழமை (07) கொக்கட்டிச்சோலை பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பினால் பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment