1 Feb 2018

நிற்சயமாக இத்தேர்தலில் நாடு பூராக கை சின்னமே வெற்றிபெறும். மட்டக்களப்பில் ஜனாதிபதி

SHARE
நிற்சயமாக இத்தேர்தலில் நாடு பூராக கை சின்னமே வெற்றிபெறும். எனவே 10  ஆம் திகதி இடம்பெறவிருக்கின்ற  தேர்தலில் கைசின்னத்திற்கு வாக்களிக்கும்படி உங்களை நான் கௌரவத்துடன் கேட்டுக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்தார்.
மட்டக்களப்பு பெரியகல்லாற்றில், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கெங்காதரன் தலைமையில் புதன் கிழமை (31) இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்…….

இன்று உள்ளுராட்சி சபை தேர்தல் சம்பந்தமாகத்தான் நான் உங்களை சந்திக்க இங்கு வந்துள்ளேன். பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவிருக்கின்ற அந்த தேர்தலிலே கைசின்னத்திற்கு வாக்களிக்கும்படி உங்களை நான் கௌரவத்துடன் கேட்டுக் கொள்கின்றேன். நிற்சயமாக நாடு பூராக கை சின்னமே இத்தேர்தலில் வெற்றிபெறும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சில பிரதேசங்களில் வெற்றிலைச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகின்றோம். சில பிரதேசங்களில் நாங்கள் குதிரைச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். மலையகத்தில் நாங்கள் சேவல் சின்னத்தில் போட்டி போடுகின்றோம். எனவே நாங்கள் இத்தேர்தலில் மிகவும் சிறந்த வெற்றியைபெற இருக்கின்றோம். அதற்காகத்தான் கைசின்னத்திற்கு வாக்களிக்கும்படி நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன்.
  
இந்த பகுதியின் அபிவிருத்திக்காக முன்னர் நான் இங்கு அடிக்கடி  வருகை தந்திருக்கின்றேன். உண்மையில் ஜனாதிபதி தேர்தலில்  என்னை ஜனாதிபதியாக்குவதற்காக நீங்கள் அனைவரும் எனக்கு வாக்களித்திருந்தீர்கள். இதற்காக உங்களுக்கு நான் நன்றி கூறுவதுடன் கௌரவப்படுத்துகின்றேன். 

நீங்கள் கை சின்னத்திற்கு வாக்களித்து தெரிவு செய்யும் பிரதிநிதிகள் உங்கள் பிரதிநிதிகள் மாத்திரமல்ல என்னுடைய பிரதிநிதியும்தான். அவர்கள் வெற்றி பெற்றபின்னர் அவர்கள் உங்களுக்கு சேவை செய்வதற்கான பணத்தினையும் ஆதரவையும் அவர்களுக்கு நான் வழங்குவேன். 
  
சிறந்ததொரு நாட்டை கட்டியெழுப்புவதே எமது நோக்காகும், மீண்டும் இந்த நாட்டில் யுத்தமொன்று ஏற்படாத வகையில் நாட்டினை கட்டியெழுப்ப வேண்டும். சிங்கள,தமிழ்,இஸ்லம் ஆகிய இனமக்கள்  சகோதரர்களாக இந்த நாட்டில் வாழவேண்டும் அதனை நான் எனது கண்களால் காணவேண்டும். உங்களுடைய பிரதிநிதிகள் மூலமாக அந்த சேவையை நான் செய்வேன்.  என அவர் இதன்போது தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: