1 Feb 2018

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய சாரண மாணவர்களின் பொங்கல் விழா.

SHARE
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய சாரணர் மாணவர்களின் கலாசார பொங்கல் விழா புதன்கிழமை (31) கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஒன்பது பாடசாலைகளைச் சேர்ந்த, சாரண மாணவர்கள் ஒன்பது பானைகளில் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மேற்கு வலய மாவட்ட உதவி சாரண ஆணையாளர் வ.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட சாரண ஆணையாளர் இ.பி.ஆனந்தராஜா, கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், பட்டிருப்பு வலய உதவி சாரண ஆணையாளர் என்.நாகராசா, அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலய அதிபர் சு.தேவராஜன், சாரண தலைவர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாரண மாணவர்களிடையே, சமய விழுமியங்களையும் எடுத்துக்கூறும் பொருட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலய ஆசிரியர் வீ.ரங்கநாதன் சமயவிழுமிய கருத்துக்களையும் சாரண மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார்.








SHARE

Author: verified_user

0 Comments: