தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து, மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை (02) பி.ப 2.30 நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்த்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் சீ.மூ.இராசமாணிக்கத்தின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்படுவதைத் தொடர்ந்து சிறப்புரைகளும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment