கடந்த கால் நூற்றாண்டு காலகட்டத்தில் பெயர் குறிப்பிடும் படியாக தேசத்திற்காக எதையாவது சாதித்துக் காட்டும்படியாக தேசிய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் திகழகுவில்லை என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துல் றமான் தெரிவித்தார்.
காத்தான்குடியில் ஞாயிற்றுக்கிழமை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த 70வது சுதந்திர தின நிகழ்வில் அவர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், வருடாவருடம் சுதந்திர தின நிகழ்வென்பது சம்பிரதாயபூர்மாகக் கொண்டாடப்படுகின்ற நிகழ்வாக அல்லாமல் உணர்வு பூர்வமாக அது இருக்க வேண்டும்.
இப்பொழுதுள்ளவை வருடா வருட நடிப்பாக வெள்ளை ஆடை அணிந்து நெஞ்சை நிமிர்த்தி சாஷ;டாங்கம் செய்வதாகத்தான் இருக்கும்.
சுதந்திர தினத்தில் எல்லோரும் பேசுகின்றதும் எல்லோரும் பேசாததுமான பல விடயங்கள் உள்ளன.
போராட்ட காலத்தில் நாட்டின் முன்னோடிகளான முஸ்லிம் தலைவர்கள் செய்த தியாகத்தை எல்லோரும் நெஞ்சை நிமிர்த்திப் பேசுவார்கள்.
ஆனால் பேசாத விடயம் கடந்த கால் நூற்றாண்டில் நமது அரசியல் தலைவர்கள் நாட்டுப்பற்றோடு எதனைச் செய்தார்கள் என்பதுதான்.
ஒரு முஸ்லிம் தலைவர், ஒரு முஸ்லிம் கட்சி நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என்றால் நாம் இந்த நாட்டின் நலன்களிலிருந்து வேறு எங்கோ செல்கின்றோம் என்றுதான் அர்த்தம்.
பல சுதந்திர தினங்களாகக் கொண்டாடப்பட வேண்டிய இன்னும் பல தினங்கள் உள்ளன.
1948 பெ;பரவரி 04 அந்நியரிடமிருந்து விடுதலை பெற்ற தினம், 2009 மே 18 பயங்கரiவாதத்திலிருந்தும், ஜனநாயகவாதிகள் சர்வாதிகாரிகளாக மாறி ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்ட 2015 ஜனவரி 08, உட்பட தகவல் அறியும் சட்டம் கொண்டு வரப்பட்டதும் ஒரு விடுதலைத் தினம் தான்.
பிரிவினையை ஏற்றுக் கொள்ளாததன் காரணமாக நாங்கள் கொடுத்த விலைகள் ஏராளம். பூர்வீகத்தையே இழந்திருக்கின்றோம். வாழ்வைத் தொலைத்து முகவரியற்றுப் போனோம்.
ஏன் இந்த இழப்புக்களுக்கு மரியாதை கிடைக்கவில்லை. சந்தர்ப்பவாத அரசியல்தான் இதற்குக் காரணம். முப்படையினரையும் நாம் பாராட்டுகின்றோம். அதேபோல தேசத்தின் பிரினைக்கு எதிராகக் குரல் கொடுத்த மக்களும் தியாகிகள்தான். அதனை இந்த நாடு உயிரோட்டமாகப் பாராட்டி நினைவூட்ட வேண்டும்.
2015 ஜனவரி 08இல சர்வாதிகார ஆட்சியை மாற்ற வேண்டும் என தேசியக் கடமை உணரப்பட்டபோது நாம் கை கொடுத்தோம். 18வது திருத்தம் மீண்டும் இந்த நாட்டைத் சுதந்திரமற்றதாக ஆக்கியது.
உரிமையோடு உணர்வோடு கொண்டாட நாம் வழி சமைத்தோம்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று வருடங்கள் கழித்தாவது ஊழல்கள் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஆணைக்குழு விசாரணையில் பலர் சிக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சியான விடயம். நல்லாட்சி இப்பொழுதுதான் சில நல்ல அறிகுறிகளைத் தருகிறது.” என்றார்.
0 Comments:
Post a Comment