5 Feb 2018

தொடர் தொழில் வழிகாட்டல் செயலமர்வு

SHARE
கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான தொடர் தொழில் வழிகாட்டல் செயலமர்வு சனிக்கிழமை (03) உக்டா சமூக வளநிலையத்தில் நடைபெற்றது.
மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மாணவர்களும், மாணவர்களது பெற்றோர்களும் இச்செயலமர்வில் கலந்து கொண்டனர்.

உக்டா நிறுவனத்தின் அமுல்படுத்தலிலும், அரச திணைக்களத்தின் ஒழுங்கமைப்பிலும், வேள்விஸன் நிறுவனத்தின் அனுசரணையிலும் இச்செயலமர்வு நடாத்தப்பட்டது.

செயலமர்வின் போது, மாணவர்களிடமிருந்த திறமைகள், ஆளுமைகள் இனங்காணப்பட்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரத்தில் மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய பாடங்கள் தொடர்பிலும் விளமளிக்கப்பட்டன.

உக்டா நிறுவனத்தின் தலைவர் அ.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், மட்டக்களப்பு மேற்கு பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 10க்கு மேற்பட்ட பயிற்றப்பட்ட தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்கள், இச்செயலமர்வில் மாணவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





SHARE

Author: verified_user

0 Comments: