7 Feb 2018

ஊடகவியலாளர் சிவராமைச் சுட்டுக் கொல்வதற்குத் துணையாக இருந்தவர் கருணா அம்மான் - ஜனா

SHARE

ஊடகவியலாளர் சிவராமைச் சுட்டுக் கொல்வதற்குத் துணையாக இருந்தவர் கருணா அம்மான் என்றழைக்கப்படும், விநாயகமூர்தி முரளிதரனாகும்.
என தம்மிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

களுதாவளையில் புதன் கிழமை(07) மாலை நடைபெற்ற இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்..

இனிவரும் காலங்களில் மோசடிக்காரர்களுடன் ஆட்சி நடத்த முடியாது என ஜனாதிபதி கடந்த 2 மணித்தியாலத்திற்கு முன்னர் தேர்தல் மேடை ஒன்றில் உரையாற்றியுள்ளார். ஆனால் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியினர் என்ன செய்கின்றார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இரந்த காலத்திலே போராட்ட இயக்கங்கள் தங்களுக்குள்ளே இருந்த முரண்பாடுகளைக் களைந்தெறிந்து, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், குரல் கொடுப்பதற்கு ஒரு சக்தி வேண்டும் என்பதற்காக 2001 இலே உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, 2009 மே 19 அன்று ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு, இன்றுவரை ஒரே ஒரு சக்தியாக ஒலித்துக் கொண்டிருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம்தான்.

ஊடகவியலாளர் சிவராமைச் சுட்டுக் கொல்வதற்குத் துணையாக இருந்த கருணா அம்மான் என்றழைக்கப்படும், விநாயகமூர்தி முரளிதரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கு அவர்தான் காரணம் எனக் கூறுகின்றார். ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிகா காலத்தில் தமிழ் மக்களின் போராட்டம் அழிவதற்குக் காரணமாக இருந்த முரளிதரன், கடந்த மகிந்த ராஜபக்சவின் கொடுங்கோலாட்சிக் காலத்திலே இரண்டு முறை பிரதியமைச்சராக இருந்துள்ளார்.

கடந்த காலத்தில் தமிழ் மக்களின் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மாறி மாறி வந்த தேசிய கட்சிகளின் ஆட்சிக் காலத்திலே அழிக்கப்பட்டனர். என அவர் தெரிவித்தார்.

இறுதி நேரத்தில் அனைத்துக்கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் சூறாவெளிப பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு,  ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல அரசியற் கட்சிகளினதும், சுயேட்சைக் குழுக்களினதும் இறுத்திக்கட்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்நெடுக்கப்பட்டடுள்ளன.














SHARE

Author: verified_user

0 Comments: