உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தேசிய ஆளடையாள அட்டையின் முக்கியத்துவம் கருதி அவற்றை ஒரு நாள் சேவையில் கிடைக்கச் செய்வதற்கான மும்முரமான பணிகள் இடம்பெற்று வருவதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியனி குணதிலக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அவர் விவரம் வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேர்தலில் வாக்களிக்கும்போது நபரொருவர் தமது ஆளடையாளத்தை உறுதி செய்வதற்கு 7 வகையான ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இதில் தேசிய ஆளடையாள அட்டை மிக முக்கியமானதாகும்.
அதன் காரணமாக வாக்காளர்களுக்கு தேசிய ஆளடையாள அட்டைகளை ஒரு நாள் சேவையின் மூலம் வழங்குவதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் மும்முரமாக நடவடிக்கையில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.
தினமும் 1500 தொடக்கம் 2000 வரையிலான தேசிய ஆளடையாள அட்டைகள் ஒரு நாள் சேவையின் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.
ஒரு நாள் சேவையில் தேசிய ஆளடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்காக சேவை வழங்குவதற்கு திணைக்களத்தில் மேலதிக பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
பத்தரமுல்லை இசுறுபாய கட்டிடத்தில் இயங்கும் ஆட்பதிவுத் திணைக்கள அலுவலகத்தில் ஒரு நாள் சேவையைக் கையாள்வதற்கான தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment