உள்ளுராட்சி தேர்தலின் முடிவுகளானது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி அலைகளைக் கொடுத்துள்ளது. ஆகவே அவர்கள் விழிப்படைந்து விடுவார்களா? அல்லது 8ம் திகதி ஜனவரி மாதம் 2015 ஆண்டு மக்களால் கொடுக்கப்பட்ட ஆணையினை காப்பாற்றுவார்களா? அல்லது அரசியல் வனாந்தரத்தினுள் செல்வார்களா என்பதனை விழிப்புடன் நோக்க வேண்டியுள்ளது என இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் பேராயருமான பேரருட்திரு. ஆசிரி பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் ஃ பேராயரின் அறிக்கை பேரருட்திரு.ஆசிரி பி.பெரேரா விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறைவனுக்கு முன்பாக சரியென ஒரு திருச்சபையாக நாம் எதனை நம்புகின்றோமோ அதனை எல்லா கிறிஸ்தவர்களையும் குறிப்பாக இலங்கையின் மெதடிஸ்த மக்கள் அனைவரையும் ஆர்வத்துடன் பிராத்தனை செய்யவும், திடமாக இருப்பதற்காகவும் இலங்கையில் மெதடிஸ்த திருச்சபையானது மக்களை வழிநடத்த பொறுப்புள்ளதாய் இருக்கின்றது. அரசியலின் நிச்சயமற்றத்தன்மையின் காரணமாக எமது பாசமிகு தாய் நாடானது இக்கட்டான சூழ்நிலையினுள் புதையுண்டுள்ளது என்பதனை நாம் புரிந்துகொள்கின்றோம்.
ஓவ்வொருவரும் 8ம் திகதி ஜனவரி மாதம் 2015ம் ஆண்டில் இருந்து கண்ட கனவுகளானது தற்பொழுது உள்ள அரசானது நல்லாட்சியினை ஸ்தாபிப்பதில் தோல்வி கண்டிருப்பது தொடர்பாக மீண்டும் ஒருமுறை எங்களது நாட்டு மக்கள் தெளிவாகவும் உரத்தகுரலில் தங்களது மன உணர்வுகளை பேசியுள்ளார்கள் என்பதனை ஒரு திருச்சபையாக நம்புகின்றோம்.
அண்மைக்கால உள்ளுராட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவர்களினை அழைக்கின்றோம் அத்தோடு உண்மையில் அவர்களுடைய ஒட்டுமொத்த அரசியல் செயற்பாடுகளே அவர்களது தோல்விக்கு வழிவகுத்துள்ளது. கடந்த சில மாதகாலமாக விசேடமாக அண்மைக்கால தேர்தல் பிரச்சாரகாலங்களில் இரு பிரதான அரசியல் கட்சியினர் தற்போதைய அரசாங்கத்தை அமைத்து ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும் வழியில் வந்துள்ளனர்.
அதுவானது மக்களுக்கு ஒரு பிழையான சமிக்ஞையினை அனுப்பியுள்ளது ஒரு தேசிய அரசாங்கத்தினைக் கொண்டு நடாத்துவதற்கான நம்பிக்கை மற்றும் விசுவாசத்தினை அவர்கள் இழந்துள்ளனர் என்பதனை அரசாங்கத்தின் இரு தலைவர்களினதும் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பேச்சுக்களில் இருந்து அவர்கள் வெளிபடுத்திய நோக்குதலினூடாக அறிய முடிகிறது. உள்ளுராட்சி தேர்தலில் தனித்தனியாக இரு கட்சிகளும் போட்டியிட தீர்மானித்தபொழுது சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கப்பட்டது. ஒருதேசிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான 8ம் திகதி ஜனவரி மாதம் 2015 ஆண்டு பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கையினை துடைத்தெறியுமுகமாக தஙகளது வாக்குக்களை மேற்கொள்ளவேண்டியிருந்தது.
உள்ளுராட்சி தேர்தலின் முடிவுகளானது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி அலைகளைக் கொடுத்துள்ளது. ஆகவே அவர்கள் விழிப்படைந்து விடுவார்களா? அல்லது 8ம் திகதி ஜனவரி மாதம் 2015 ஆண்டு மக்களால் கொடுக்கப்பட்ட ஆணையினை காப்பாற்றுவார்களா? அல்லது அரசியல் வனாந்தரத்தினுள் செல்வார்களா என்பதனை விழிப்புடன் நோக்க வேண்டியுள்ளது.
இந்த மண்ணை ஜனவரி மாதம் 2015 ஆண்டுக்கு முன்னர் ஆட்சி புரிந்தவர்கள் எல்லா வன்முறைகளையும் மற்றும் அராஜகம், சுரண்டல்களையும் மீளவும் புரியாதவாறு நடந்துக்கொள்ளுமாறும், அவர்கள் மக்களுக்கு கொடுத்த ஆணையினை குறித்துவைத்துக் கொள்ளுமாறு. நாம் கடந்த 10ம் திகதி பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில வெற்றி பெற்றவர்களை அழைக்கின்றோம்.
முன்னைய ஆட்சியினால் பாதுகாக்கப்பட்டு பின்புலத்தில் இருந்து செயற்பட்டவர்களினால் சமயம், இனம் தொடர்பாக வன்முறைகளினையும் பயத்தினையும் ஏற்கனவே சுவாசிக்கவும், கேட்கவும் தொடங்கிவிட்டோம் என்பது மிகவும் துன்பமான விடயமாகவுள்ளது. இந்த மண்ணிலுள்ள எல்லா மக்களையும் நிபந்தனையற்ற பொறுப்பேற்றலின் பிரகாரம் செயற்பட உள்ளுராட்சிதேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்றுள்ள தலைவார்களை நாங்கள் திருச்சபையாக அழைக்கின்றோம்.
உள்ளுராட்சி நிறுவனங்களில் அரசியல் அதிகாரங்களில் வந்திருக்கின்ற அவர்கள் மீண்டும் பின்நோக்கிய செயற்முறையினை செய்யாது விட்டு எங்களுடைய மண்ணின் மக்களானவர்கள் ஒரு சமுதாயத்தினை நோக்கிய தேடலை ஆரப்பித்துள்ளனர். அங்கேசமயம் மற்றும் இனம் அடிப்படையில் பேதமில்லாத அனுபவங்களையும் அனைத்து மக்களுக்கான நீதி, சமத்துவம் என்பவற்றையும் கௌரவத்தடன் வாழ்வதற்கான சுதந்திரத்தiயும் நாடிநிற்கின்றனர்.
நீங்கள் பெற்றிருக்கும் வெற்றியானது முன்னைய ஆட்சியில் புரியப்பட்ட வன்முறைகளை மற்றும் சுரண்டல்களை மக்கள் மறந்துள்ளனர் என்பது காரணமல்ல ஆனால் மக்களுக்கு கொடுக்கப்பட்ட சத்தியமானது நல்லாட்சியினை நிலைநிறுத்துவதில் உள்ள தோல்வி மக்களின் மனத்தில் உள்ள விரக்தி மற்றும் ஏமாற்றத்தின் வெளிப்படையான வெளிப்பாடு என்பவற்றினை தற்போதைய ஆட்சியின் மீது மக்கள் கொண்டுள்ளனர் என்பதையே காட்டுகின்றது.
நாங்கள் எங்களுடைய கடுமையான பிராத்தனைகளில் இலங்கையின் உள்ள எல்லா அரசியல் தலைவர்களையும் வைத்துள்ளோம் என்பதனை உறுதி பூணுகிறோம். ஆகையினால் அற்பமான அரசியல் லாபம், தனிப்பட்ட அரசியல் நிகச்சி நிரல் என்பதனை தள்ளிவைத்துவிட்டு. நாட்டினை அற்பணிப்போடு நீதியானதும், சமத்துவமானதும் மற்றும் நல்லாட்சி முறையிலாக வழிநடத்துவதே இலங்கை மக்களினுடைய அழுகையும் மற்றும் அனுதின தேவையும் பிராததனையுமாக உள்ளது.
0 Comments:
Post a Comment